5g auction:5ஜி ஏலத்தில் களமிறங்கும் அதானி: 4 நிறுவனங்கள் பெயர் வெளியீடு: தெரிய வேண்டிய 10 அம்சங்கள் என்ன?

Published : Jul 12, 2022, 04:26 PM IST
5g auction:5ஜி ஏலத்தில் களமிறங்கும் அதானி: 4 நிறுவனங்கள் பெயர் வெளியீடு: தெரிய வேண்டிய 10 அம்சங்கள் என்ன?

சுருக்கம்

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் அதானி குழுமத்தின் அதானி டேட்டா நெட்வொர்க் உள்ளிட்ட 4 நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வந்துள்ளன என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் அதானி குழுமத்தின் அதானி டேட்டா நெட்வொர்க் உள்ளிட்ட 4 நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வந்துள்ளன என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதானி நெட்வொர்க் தவிர்த்து, ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம், வோடபோன் ஐடியா, பார்தி ஏர்டல் ஆகிய நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்கின்றன.

வரும் 5ஜி ஏலத்தில் 600மெகா ஹெட்ஸ், 700 மெகாஹெட்ஸ், 800,900 மெகாஹெட்ஸ், 1800 மெகாஹெட்ஸ், 2100மெகாஹெட்ஸ், 2300மெகாஹெட்ஸ், 2500மெகாஹெட்ஸ், 3300மெகாஹெட்ஸ், 26ஜிகாஹெட்ஸ் ஆகியவை ஏலம் விடப்படஉள்ளன.

5ஜி ஏலம் குறித்த முக்கிய அம்சங்கள்:

1.    5ஜி ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ள 4 நிறுவனங்கள் இறுதியானவை அல்ல. இது தகவல் மட்டும்தான். இந்த 4 நிறுவனங்கள் முன்தகுதி பெற்றவை என்று கருத முடியாது

2.    வரும் 26ம் தேதி 5ஜி அலைக்கற்றை ஏலம் நடக்கிறது.

3.    5ஜி அலைக்கற்றை ஏலத்தில் வெற்றி பெறும் நிறுவனம், அடுத்த 20 ஆண்டுகளுக்கு ஸ்பெக்ட்ரமை பயன்படுத்துவார்கள்

4.    ரூ.4.30 லட்சம் கோடி மதிப்புள்ள 72,097 மெகாஹெட்ஸ் ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்படஉள்ளது.

5.    5ஜி அலைக்கற்றை ஏலம் நடத்தலாம் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(டிராய்) பரிந்துரை செய்ததையடுத்து, மத்தியஅமைச்சரவை கடந்த மாதம் 5ஜி ஏலம் நடத்தஒப்புதல் அளித்தது.

6.    ஏலம் கேட்க வரும நிறுவனங்களைஈர்க்க பேமெண்ட் முறை எளிதாக்கப்பட்டுள்ளது.

7.    முதல்முறையாக, ஏலத்தில் வெற்றி பெறும் நிறுவனங்கள், கட்டாய முன்பணம் கட்டத்தேவையில்லை. 

8.    ஏலத்தில் பெற்றி பெறும் நிறுவனங்கள், ஏலத்தின் தொகையை 20 தவணைகளாகப் பிரித்துச் செலுத்தலாம். ஒவ்வொருஆண்டின் தொடக்கத்திலும் அட்வான்ஸ் செலுத்த வேண்டும். 

9.    சந்தைஆய்வு நிறுவனங்கள் கூறுகையில் “ 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் அதானி குழுமம் நுழைந்திருப்பதால், ஏலம் கடும் போட்டி நிறைந்ததாக இருக்கும். 

10.    கோல்ட்மேன் சான்ஸ் ஆய்வாளர்கள் கூறுகையில் “ 5ஜி ஏலத்தில் அதானி குழுமம் வெற்றி பெறுவார்களா என்று தெரியாது. ஆனால் அதானி குழுமம் ஏலத்தில் வந்திருப்பதால், கடும்போட்டி உருவாகும்.  அதுமட்டுமல்லாமல் மொபைல் சேவையில் கூடுதலாக ஒரு நிறுவனம் வருவதற்கா கதவு திறக்கப்படும்” எனத் தெரிவி்த்தனர்


 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

வீடு, கார், தனிநபர் கடன்களில் இஎம்ஐ குறையுது.. ரிசர்வ் வங்கியின் பரிசு.. எவ்வளவு குறையும்?
கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. ரெப்போ விகிதம் 5.25% ஆக குறைப்பு.. அதிரடி முடிவு