ஒரு குட்டி விமானத்தையே தூக்கிச் சென்று பறக்கம் திறன் கொண்ட, திமிங்கல வடிவிலான பெலுகா ஏர்பஸ் கார்கோ விமானம், முதல்முறையாக சென்னை சர்வதேச விமானநிலையத்துக்கு நேற்று வந்தது.
ஒரு குட்டி விமானத்தையே தூக்கிச் சென்று பறக்கம் திறன் கொண்ட, திமிங்கல வடிவிலான பெலுகா ஏர்பஸ் கார்கோ விமானம், முதல்முறையாக சென்னை சர்வதேச விமானநிலையத்துக்கு நேற்று வந்தது.
இந்த விமானம் தென் இந்திய மாநிலங்களுக்கும், சென்னைக்கும் வருவது இதுதான் முதல்முறையாகும்.
திமிங்கல வடிவிலான ஏர்பஸ் பெலுகா நம்பர்2(ஏ300-608ST) என்ற பெயர் கொண்ட விமானம், பிரான்ஸ் நாட்டின் டோலூஸி என்ற இடத்திலிருந்து கடந்த 7ம் தேதி புறப்பட்டது. அங்கிருந்து மெர்சிலி, கெய்ரோ, அபுதாபி, அகமதாபாத்துக்கு சென்றுவிட்டு, எரிபொருள் நிரப்புவதற்காக நேற்று சென்னை விமானநிலையத்தில் தரையிறங்கியது.
ஸ்பைஸ்ஜெட்டுக்கு மீண்டும் சிக்கல்: 9-வது முறையாக விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு?
undefined
வழக்கமான விமானங்களைவிட வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த பெலுகா ஏர்பஸ் விமானம், 56.16மீட்டர் நீளமும், 17.25 மீட்டர் உயரமும், 7.7.மீட்டர் அகலமும் கொண்டது. இந்த பெலுகா விமானம் அதிகபட்சமாக 155 டன் வரை எடை சுமக்கும் திறன் கொண்டதாகும்.
டிசிஎஸ் பங்கு விலை 3 வாரங்களில் இல்லாத சரிவு
இந்த பெலுகா விமானம் சரக்குப் போக்குவரத்துக்கு மட்டுமே பெரும்பாலும் பயன்படுகிறது. பெரிய சரக்குகள், பெரிய எந்திரங்கள், சிறிய ரக விமானங்களைக்கூட இந்த விமானம் தூக்கிச்செல்லும் திறன் கொண்டது
சரக்குப் போக்குவரத்துக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த பெலுகா விமானம் தற்போது ராணுவத்திலும் சரக்குகளை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த பெலுகா ஏர்பஸ் விமானத்தை ஏ300-600எஸ்டி சூப்பர் டிரான்ஸ்போர்ட்டர் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விமானத்தில் சரக்குகளை ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் தானியங்கி முறை செயல்படுவதால், இதில் சரக்குகளை ஏற்றுவதும், இறக்குவதும் எளிதானதாகும்.
சீனாவை முந்தும் இந்தியா: 2023ல் உலகிலேயே அதிக மக்கள் தொகை நாடாக மாறும் : ஐ.நா தகவல்
இந்த விமானம் சென்னை விமானநிலையத்திலிருந்து பிற்பகல் 1.30மணி அளவில் புறப்பட்டு தாய்லாந்து நாட்டின் பாட்டயா நகருக்குப் புறப்பட்டுச் சென்றது.