sonia gandhi: ed: சோனியா காந்தியிடம் 3-வது முறையாக அமலாக்கப்பிரிவு இன்றும் விசாரணை

By Pothy RajFirst Published Jul 27, 2022, 11:00 AM IST
Highlights

நேஷனல் ஹெரால்டு நாளேட்டின் பங்குகளை வாங்கியது தொடர்பான வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கப்பிரிவு இன்றும் 3வது முறையாக விசாரணை நடத்த உள்ளனர்.

நேஷனல் ஹெரால்டு நாளேட்டின் பங்குகளை வாங்கியது தொடர்பான வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கப்பிரிவு இன்றும் 3வது முறையாக விசாரணை நடத்த உள்ளனர்.

இதற்கான சம்மனும் சோனியா காந்தியிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் வழங்கியதாக பிடிஐ செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னதாக நேற்று 2வது முறையாக அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு சோனியா காந்தி ஆஜராகினார். அப்போது அவரிடம் 6மணிநேரம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மாலை 7மணிக்கு முன்பாகத்தான் சோனியா காந்தி தனது வாக்குமூலத்தை பதிவு செய்துவிட்டு, அமலாக்கப்பிரிவு அலுவலகத்திலிருந்து புறப்பட்டார். 

மேற்கு வங்க ஆட்சி மீது கை வைப்பீங்க.? வங்கம் வந்தால் வங்கப் புலிகள் உங்களை வேட்டையாடும்.! மம்தா எச்சரிக்கை!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் நேற்று 2வது முறையாக விசாரணை நடத்த அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர். இதை ஏற்று அவர் நேற்று காலை 11 மணிக்கு அமலாக்கப்பிரிவு அலுவலகம் வந்தார். 

அவருடன் அவரின் மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி உடன் வந்திருந்தனர். பிரியங்கா காந்தி மட்டும் அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் இருந்தார், ராகுல் காந்தி சிறிது நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டார். 

பிற்பகல் உணவு இடைவேளைக்காக 2 மணிக்கு புறப்பட்டுச் சென்ற சோனியா காந்தி 3.30மணிக்கு மீண்டும் வந்து விசாரணையில் இணைந்தார்.

மாநிலங்களவையிலிருந்து திமுக எம்.பி.க்கள் 6 பேர் உள்பட 19 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்: இடைநீக்கமானோர் யார்?

இதற்கு முன் கடந்த 21ம் தேதி சோனியா காந்தியிடம் முதல் கட்ட விசாரணை நடந்தது. அப்போது அமலாக்கப்பிரிவு அதிகாரிகளின் 28 கேள்விகளுக்கு சோனியா காந்தி பதில் அளித்துள்ளார். 

சோனியா காந்தியுடன் உடன் இருந்த பிரியங்கா காந்தி அவ்வப்போது அவருக்கு மாத்திரைகள் வழங்கி கவனித்துக்கொண்டதாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். 

அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நேற்று நடத்திய விசாரணையில், சோனியா காந்தியிடம், நேஷனல் ஹெரால்டு நாளேடு எவ்வாறு நடத்தப்பட்டது, யார் நடத்தியது, பல்வேறு அதிகாரிகளின் பங்குகள், அவருடைய மகன், அவருடைய பங்களிப்பு ஆகியவை குறித்து கேள்விகள் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

வழக்கு விவரம்:

rahul : rahul arrested: 'மோடிதான் ராஜா': டெல்லியில் கைதுக்குப்பின் ராகுல் காந்தி விமர்சனம்

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிறுவனம் மூலம், நேஷனல் ஹெரால்டு என்ற நாளேடு தொடங்கப்பட்டது. இந்தநிறுவனத்தை நடத்த ரூ.90 கோடியை காங்கிரஸ் கட்சி கடனாகக் கொடுத்தது. இந்த கடனை திருப்பிச் செலுத்தாமல் நேஷனல் ஹெரால்ட் நிறுவனம் நஷ்டப்பட்டு கடந்த 2008ம் ஆண்டு நாளேடு நிறுத்தப்பட்டது. பின்னர் 2016ம் ஆண்டு முதல் நேஷனல் ஹெரால்ட் நாளேடு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தின் பங்குகளை ரூ.50 லட்சத்துக்கு யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டபோது, அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தில் பங்குதாரர்களின் ஒப்புதல்களைப் பெறவில்லை. இந்த நிறுவனத்தின் 76% பங்குகள் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியிடமும், 24 % பங்குகள் ராகுல் காந்தியிடமும் உள்ளன. 

சோனியா காந்தியிடம் 2-வது முறையாக அமலாக்கப் பிரிவு இன்று விசாரணை: டெல்லியில் 144 தடை உத்தரவு

ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள அசோசியேட்டட் ஜர்னல் பங்குகளை வெறும் ரூ.50 லட்சத்துக்கு மாற்றியதில் முறைகேடு நடந்ததாகக் கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமி  வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

click me!