5வது தலைமுறைக்கான 5ஜி அலைக்கற்றை ஏலத்தின் முதல்நாளிலேயே முகேஷ் அம்பானி, சுனில் பாரதி மிட்டல், கவுதம் அதானி நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகியது. ஏறக்குறைய ரூ1.45 லட்சம் கோடிக்கு ஏலம் போனது என்று பிடிஐ செய்திகள் தெரிவிக்கின்றன
5வது தலைமுறைக்கான 5ஜி அலைக்கற்றை ஏலத்தின் முதல்நாளிலேயே முகேஷ் அம்பானி, சுனில் பாரதி மிட்டல், கவுதம் அதானி நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகியது. ஏறக்குறைய ரூ1.45 லட்சம் கோடிக்கு ஏலம் போனது என்று பிடிஐ செய்திகள் தெரிவிக்கின்றன
மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் ஏலம் குறித்து கூறுகையில் “ அனைத்துவிதமான எதிர்பார்ப்புகளையும் கடந்த 2015ம் ஆண்டு சாதனையை முறியடித்துவிட்டது. அப்போது ரூ.1.09 லட்சம் கோடிக்கு ஸ்பெக்ட்ரம் ஏலம் போனது” எனத் தெரிவித்தார்
இந்திய ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக ரூ.82 ஆக வீழ்ச்சி அடையும்: பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு
கடந்த 2016, 2021ம் ஆண்டு ஏலத்தின்போது 700 மெக்ஹெட்ஸ் அலைவரிசையை தொலைத்தொடர்பு நிறுவனம் ஏலம் எடுக்க அதிக ஆர்வம் காட்டவில்லை. ஆனால், இந்த முறை அதிகமான விருப்பங்கள் வந்தன. தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் தகவலின்படி, 700மெகாஹெட்ஸ் அலைவரிசை ரூ.39,720 கோடிக்கு கேட்கப்பட்டுள்ளது
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, மிட்டலின் பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா, அதானி குழுமம் ஆகிய 4 நிறுவனங்களுமே ஏலத்தில் ஆர்வத்துடன் போட்டியிட்டன.
4 ஜி தொழில்நுட்பத்தைவிட 5ஜி அலைவரியை அதிவேகமானது. 10 மடங்கு இணையதள வேகத்தை கொண்டிருக்கும் என்பதால், இந்த ஏலத்தில் 4 நிறுவனங்களுமே கடும் போட்டியிடுகின்றன.
5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று தொடக்கம்: அதானி, ரிலையன்ஸ் உள்பட 4 நிறுவனங்கள் பங்கேற்பு
மத்திய தொலைத்தொடர்பு வட்டாரங்கள் கூறுகையில் “ 5ஜி அலைக்கற்றை ஏலம் முடிந்ததும், நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு நடக்கும். அதன்பின் செப்டம்பர் அக்டோபரில் 5ஜி சேவை தொடங்கும். ஆகஸ்ட் 15ம் தேதி்க்குள் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை முடிக்க இலக்கு வைத்துள்ளோம்.
முதல்நாளில் 4சுற்று ஏலம் நடந்தது. நடுத்தர மற்றும் உயர்ரக அலைவரிசைக்கு அதிக ஆர்வம் இருந்து ஏலம் கேட்கப்பட்டது. 9அலைவரிசைகளில் 7அலைவரிசைகளுக்கு, ஏலம் கோரப்பட்டது.
தொலைத்தொடர்பு துறையில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் 700மெகாஹெட்ஸ் ரூ.39,270 கோடிக்கு ஏலம் கேட்கப்பட்டது. 26ஜிகாஹெட்ஸ் ரூ.14,632 கோடிக்கு ஏலம் கோரப்பட்டது.
800மெகாஹெட்ஸ், 2300மெகாஹெட்ஸ் அலைவரிசையை யாரும் ஏலம் கேட்கவில்லை. ஒட்டுமொத்தமாக ரூ.4.30 லட்சம் கோடிக்கு 72 ஜிகாஹெட்ஸ் அலைவரிசை ஏலம் விடப்பட உள்ளது. இந்த ஏலம் புதன்கிழமை(இன்று) முடிந்துவிடும்” எனத் தெரிவித்தனர்.
படிப்படியாக உயரும் தங்கம் விலை: முழிச்சுக்கோங்க மிடில் கிளாஸ்: இன்றைய நிலவரம் என்ன?
முதல் நாள் ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 700மெகாஹெட்ஸ் அலைவரிசையை ரூ.39,270 கோடிக்கு வாங்கியது. இந்த 700மெகாஹெட்ஸ் அலைவரிசையை எந்த இடத்திலும் பயன்படுத்தலாம் என்பதால் ரிலையன்ஸ் ஜியோ இதை விலைக்கு வாங்கியது.