தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது.
தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று காலை நிலவரப்படி, தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 7ரூபாயும், சவரணுக்கு 56 ரூபாயும் அதிகரித்துள்ளது.
பெங்களூரு- மும்பை இடையே ஆகாசா ஏர் விமான சேவை: ஆகஸ் 19ல் தொடக்கம்
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,728க்கும், சவரண் ரூ.37,824க்கும் விற்பனை ஆனது. இன்று காலை தங்கத்தின் விலையில் 4-வது நாளாக உயர்ந்துள்ளது.
இதன்படி, சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 7 ரூபாய் அதிகரித்து ரூ4,735ஆகவும், சவரணுக்கு ரூ.56 அதிகரித்து ரூ.37,880க்கும் விற்கப்படுகிறது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4735ஆக விற்கப்படுகிறது.
பொருளாதார மந்தநிலையின் பிடியில் ஆசிய நாடுகள்: தூண்டிலில் சிக்காத இந்தியா: இலங்கை நிலை மோசாகும்
தங்கதத்தின் விலை கடந்த 4 நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. கடந்த வாரத்தின் தொடக்கத்தில் சரிந்த தங்கம் விலை, தற்போது உயர்ந்து வருகிறது. கடந்த 18ம் தேதி முதல் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது.
கடந்த 18ம் தேதி முதல் இன்று வரை தங்கம் கிராமுக்கு 49 ரூபாய் அதிகரித்துள்து, சவரனுக்கு, ரூ.376 அதிகரித்துள்ளது. தங்கத்தின் விலை படிப்படியாக உயர்ந்து வருவதால், நடுத்தர குடும்பத்தினர், சாமானியர்கள் தங்கம் வாங்கும் முடிவை தள்ளிவைக்காமல் விரைந்து வாங்க ஏற்ற தருணம்.
அமெரிக்க பெடரல் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் இன்றும் நாளையும் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில், வட்டி வீதம் 75 புள்ளிகள் வரை உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக ரூ.82 ஆக வீழ்ச்சி அடையும்: பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு
இந்த அறிவிப்புக்குப்பின் ஆசிய, ஐரோப்பிய சந்தையில் பெரிய மாற்றம் நிகழக்கூடும் எனத் தெரிகிறது. தங்கம் விலையில் மாற்றத்தையும் உருவாக்கலாம்.
வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 80 பைசா குறைந்து, ரூ.60.00 ஆகவும், கிலோவுக்கு ரூ.800 குறைந்து, ரூ.60,000க்கும் விற்கப்படுகிறது.