தொழிலதிபரும், பங்குவர்த்தகருமான ராகேஷ் ஹூன்ஹூன்வாலாவின் ஆகாசா ஏர் விமான சேவை மும்பை-பெங்களூரு இடையே ஆகஸ்ட் 19ம்தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக பிடிஐ செய்திகள் தெரிவிக்கின்றன.
தொழிலதிபரும், பங்குவர்த்தகருமான ராகேஷ் ஹூன்ஹூன்வாலாவின் ஆகாசா ஏர் விமான சேவை மும்பை-பெங்களூரு இடையே ஆகஸ்ட் 19ம்தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக பிடிஐ செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆகாசா ஏர் விமான சேவை தனது முதல் வர்த்தகரீதியான பயணிகள் விமானப் போக்குவரத்தை ஆகஸ்ட் 7ம் தேதி தொடங்குகிறது. முதலில் மும்பை-அகமதாபாத் இடையே விமானச் சேவை தொடங்குகிறது, அதன்பின் 13ம் தேதி கொச்சி- பெங்களூரு இடையே தொடங்குகிறது.
கலக்க வரும் ராயல் என்பீல்ட், ஹோன்டாவின் இரு புதிய பைக்குகள்: விவரம் என்ன?
ஆகாசா ஏர் விமான நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் “ அகமதாபாத், கொச்சி, மும்பை, பெங்களூரு இடையே விமானப் போக்குவரத்தை தொடங்க தேவையான பணிகள் முடிந்துவிடும். வாரத்துக்கு 82 விமானங்கள், முதல்சில வாரங்களுக்கு இருக்கும்” எனத் தெரிவித்துள்ளது.
மும்பை-அகமதாபாத் இடையே வாரத்துக்கு 26 முறையும், பெங்களூரு-கொச்சி, பெங்களூரு-மும்பை இடையே வாரத்துக்கு 28 முறையும் விமான சேவை இருக்கும்.
வர்த்தகச் சேவையை ஆகாசா தொடங்கியபின்,ஒவ்வொரு மாதமும் இரு புதிய விமானங்கள் நிறுவனத்தில் இணைக்கப்பட உள்ளன. 2023ம் ஆண்டுக்குள் 18 விமானங்கள் இணைக்கப்படும். இது தவிர அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 12 முதல் 14 போயிங் 737 விமானங்களும் இணைக்கப்பட உள்ளன.
மும்பை முதல் அகமதாபாத்துக்கு விமானக் கட்டணாக ரூ.3948 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற விமானங்களில் இந்த இடங்களுக்கு ரூ.4,262 கட்டணமாக இருக்கிறது.
முதல் கட்டமாக 4 இடங்களை இணைக்கும் வகையில் விமானச் சேவை தொடங்குகிறது. பெங்களூரு, கொச்சி,அகமதாபாத், மும்பை ஆகிய நகரங்களை இணைத்து முதல்கட்ட சேவை தொடங்குகிறது.
ஆகாசா ஏர் நிறுவனம் சமீபத்தில் வாங்கிய 737 மேக்ஸ் விமானங்கள்தான் இயக்கப்படுகின்றன. போயிங் நிறுவனம் ஒரு மேக்ஸ் விமானத்தை வழங்கியுள்ளது, 2வது விமானம் இந்த மாத இறுதியில் வரும்.
72 போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை வாங்க போயிங் நிறுவனத்துடன் கடந்த 2021ம் ஆண்டு நவம்பரில் ராகேஷ் ஹூன்ஹூன்வாலா ஒப்பந்தம் செய்திருந்தார். இந்த விமானங்கள் அனைத்தும், எரிபொருளை மிச்சப்படுத்தி பறக்கும் சிஎப்எம் லீப் பி ரக எஞ்சனால் வடிவமைக்கப்பட்டவை