800.78 டன் தங்கம் கையிருப்பு கொண்டிருக்கும் இந்தியா ஃபோர்ப்ஸ் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. 8,1336.46 டன் தங்கம் கையிருப்பு கொண்ட அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.
தங்க கையிருப்பு ஒரு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக நிதி நெருக்கடியை ஏற்படும் காலங்களில் தங்க இருப்பு நம்பகமான சேமிப்பாக கைகொடுக்கும்.
நவீன பொருளாதாரச் சூழ்நிலைகள் மாறினாலும், தங்க இருப்பு ஒரு நாட்டின் கடன் தகுதி மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார நிலையை முடிவு செய்யும் கருவியாக உள்ளது. இந்நிலையில், ஃபோர்ப்ஸ் தங்கம் கையிருப்பு அடிப்படையில் உலகின் முதல் 10 நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
undefined
அதன்படி, அமெரிக்காவிடம் 8,1336.46 டன் தங்கம் கையிருப்பில் உள்ளது. ஜெர்மனி 3,352.65 டன் தங்க கையிருப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இத்தாலி (2,451.84 டன்), பிரான்ஸ் (2,436.88 டன்), ரஷ்யா (2,332.74 டன்), சீனா (2,191.53 டன்), சுவிட்சர்லாந்தில் (1,040.00 டன்), ஜப்பான் (845.97 டன்) ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
பொங்கல் பரிசாக பைக் கொடுத்து அசத்திய ஜவுளிக்கடை உரிமையாளர்! ஊழியர்கள் உற்சாகம்!
800.78 டன் தங்கம் கையிருப்பு கொண்டிருக்கும் இந்தியா ஃபோர்ப்ஸ் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் நெதர்லாந்து 612.45 டன் தங்கம் கையிருப்பு வைத்திருக்கிறது.
நாடுகள் தங்கம் இருப்பு வைத்திருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக, தங்கம் ஒரு நிலையான மற்றும் நம்பகமான மதிப்பு கொண்ட பொருளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தங்கத்தை இருப்பில் வைத்திருப்பதன் மூலம் பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்த நம்பிக்கையை வளர்க்க முடியும். மேலும், தங்க இருப்பு வரலாற்று ரீதியாக ஒரு நாட்டின் நாணய மதிப்பு உயர்வுக்கும் துணைபுரிகிறது.
தங்கம் ஒரு உறுதியான சொத்தாக இருப்பதால், மற்ற சொத்துக்களின் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்க உதவுகிறது. தங்கத்தின் மதிப்பு அமெரிக்க டாலருடன் தொடர்புடையதாகவும் உள்ளது. டாலரின் மதிப்பு குறையும் போது, தங்கத்தின் மதிப்பு அதிகரிக்கிறது.
சர்வதேச வர்த்தகம் மற்றும் நிதித்துறையிலும் தங்க இருப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. சில நாடுகள் வர்த்தக ஏற்றத்தாழ்வுகளைத் தீர்க்க அல்லது கடனுக்கான பிணையாக தங்கத்தைப் பயன்படுத்துகின்றன. தங்க கையிருப்பு ஒரு நாட்டின் கடன் தகுதியை மேம்படுத்துவதோடு, உலகப் பொருளாதார அமைப்பில் அந்த நாட்டின் நிலையை நிர்ணயம் செய்யும் காரணியாக இருக்கிறது.
உலகின் சக்திவாய்ந்த கரன்சி எது? டாலருக்கே இந்த நிலைமையா? அப்ப இந்திய ரூபாயின் மதிப்பு எப்படி?