அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் பிட்காயின் பரிமாற்ற-வர்த்தக நிதிகளுக்கு ஒப்புதல் அளித்த நிலையில் சக்திகாந்த தாஸ் முதலீட்டாளர்களை எச்சரித்துள்ளார்.
உலக அளவில் கிரிப்டோகரடன்சிக்கு மதிப்பு அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் உள்ள் கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஒரு எச்சரிக்கை கொடுத்துள்ளார். டாவோஸில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில் பேசிய அவர், கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு அபாயங்கள் இல்லாமல் இல்லை என்று அவர் கூறியிருக்கிறார்.
சமீபத்தில் கிரிப்டோகரன்சி விலை அதிகரிப்பு இருந்தபோதிலும், இந்தியா போன்ற வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரம் கொண்ட நாடுகளுக்கு ஏற்படுத்தக்கூடிய தீங்குகள் குறித்து கவலைகளை எழுப்பினார். அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் பிட்காயின் பரிமாற்ற-வர்த்தக நிதிகளுக்கு ஒப்புதல் அளித்த நிலையில் சக்திகாந்த தாஸ் முதலீட்டாளர்களை எச்சரித்துள்ளார்.
இந்தியாவின் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மற்ற நாடுகளின் முடிவுகளை அப்படியே பின்பற்றுவதாக இருக்காது என்று அவர் வலியுறுத்தினார். ரிசர்வ் வங்கி ஆளுநர் கிரிப்டோகரன்சிகள் குறித்து எச்சரிக்கை தெரிவித்திருப்பது முதல் முறை அல்ல.
சிம் கார்டு, இன்டர்நெட் இல்லாமலே வீடியோ ஸ்ட்ரீமிங் செய்யலாம்! மத்திய அரசின் புதிய ஐடியா!
கிரிப்டோகரன்ஸிகளின் நிதி நிலைத்தன்மைக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் உலகளாவிய நிதி நெருக்கடியைத் தூண்டுக்கூடும் என்றும் சக்திகாந்த தாஸ் தொடர்ந்து எச்சரித்து வருகிறார். இந்தியாவில் கிரிப்டோவின் எதிர்காலம் மிகவும் மோசமாக இருப்பதாக இரண்டே வார்த்தைகளில் கூறினார்.
பின்னர் தனது கருத்தை விளக்கிக் கூறிய அவர், "சிலர் இதை ஒரு புதிய கட்சியாக கொண்டாடுகிறார்கள். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஆபத்தை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். நிலையற்ற தன்மை, பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் போன்ற அபாயங்கள் இயல்பாகவே உள்ளன" என்றும் தெரிவித்தார்.
இந்தியாவின் பொருளாதாரக் கண்ணோட்டத்தை விவரித்த அவர், உணவுப் பணவீக்கத்தின் சவால் குறித்துப் பேசினார். உலகளாவிய விநியோகச் சங்கிலி சீர்குலைவுகள் மற்றும் கணிக்க முடியாத வானிலை நிகழ்வுகளால் உணவுப் பணவீக்கத்தில் ஏற்ற இறக்கம் ஏற்படுவதாக அவர் கூறினார். கடந்த ஆண்டில் உணவுப் பொருள்களின் விலையில் ஏற்பட்ட கணிசமான ஏற்ற இறக்கங்கள், ரிசர்வ் வங்கியின் இலக்கான 4 சதவீதத்தை விட அதிகமானது. கனமழை மற்றும் வெள்ளத்தால் காய்கறிகளின் விலையில் ஏற்படும் பாதிப்பை அவர் எடுத்துரைத்தார். ஆனால் இந்த ஏற்ற இறக்கங்களை நிவர்த்தி செய்வதில் ரிசர்வ் வங்கி விழிப்புடன் இருப்பதாகவும் உறுதியளித்தார்.
கடந்த மாத இறுதியில், Binance, Kucoin, Huobi, Kraken, Gate.io, Bittrex, Bitstamp, MEXC Global மற்றும் Bitfenex ஆகிய ஒன்பது பிரபல கிரிப்டோகரன்சி இணையதளங்களை மத்திய அரசு தடை செய்துள்ளது. சட்டவிரோத பரிவர்த்தனைகள் நடப்பதாகக் கூறி, அந்நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகினார் விவேக் ராமசாமி! ட்ரம்ப் போட்டியிட ஆதரவு!