முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, இந்தியாவில் உள்ள இரண்டு பிரபலமான கோவில்களுக்கு தலா ரூ.2,51,00,000 காணிக்கை வழங்கினார்.
ஆனந்த் அம்பானி செவ்வாய்க்கிழமை சைத்ர நவராத்திரியின் அஷ்டமி தினத்தை முன்னிட்டு அசாமின் கவுஹாத்தியில் உள்ள காமாக்யா கோயிலுக்குச் சென்று பெரும் தொகையை காணிக்கையாகச் செலுத்தியுள்ளார்.
ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, இந்தியாவில் உள்ள இரண்டு பிரபலமான கோவில்களுக்கு மொத்தம் 5 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை அளித்துள்ளார். ஒடிசாவில் உள்ள ஜெகநாதர் கோயிலுக்கும், அசாமில் உள்ள காமாக்யா கோயிலுக்கும் தலா ரூ.2,51,00,000 காணிக்கை வழங்கினார்.
29 வயதான ஆனந்த் அம்பானி ரிலையன்ஸ் வென்ச்சர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார். இவர் செவ்வாய்க்கிழமை சைத்ர நவராத்திரியின் அஷ்டமியை முன்னிட்டு, அசாமின் கவுஹாத்தியில் உள்ள காமாக்யா கோயிலுக்குச் சென்றார்.
மரத்தைக் கட்டிப் பிடிக்க ரூ.1500 கட்டணமா? பெங்களூரு நிறுவனத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
நாட்டின் மிக உயர்ந்த சக்தி பீடங்களில் ஒன்றான காமாக்யா கோயிலில் பரிக்ரமா சடங்கையும் ஆனந்த் அம்பானி செய்துள்ளார். ஆனந்த் அம்பானி மற்றும் அவரது மனைவி ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் இந்தியாவில் உள்ள கோவில்களுக்கு அடிக்கடி செல்வதைக் காணலாம்.
இந்த ஆண்டு, அம்பானி குடும்பம் குஜராத்தின் ஜாம்நகரில் 14 புதிய கோயில்களைக் கட்டுவதற்கு நன்கொடை அளித்து உதவியுள்ளது.
2022ஆம் ஆண்டு ராஜஸ்தானின் ராஜ்சமந்தில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலில் பாரம்பரியமான ‘ரோகா’ விழாவில் இருவரும் நிச்சயதார்த்தம் செய்தனர். இந்த ஆண்டு மார்ச் மாதம், ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் ஜாம்நகரில் நடைபெற்றன. மார்ச் 1 முதல் 3 வரை மூன்று நாள் நடந்த கொண்டாட்டத்தில் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள், கோடீஸ்வரர்கள் உட்பட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
ஈரான் சிறைபிடித்த கப்பலில் இருந்த இந்தியப் பெண் பத்திரமாக வீடு திரும்பினார்: வெளியுறவுத்துறை