Merchandise Export : சீனாவுக்கு இணையாக உற்பத்தி துறையில் வளர்ச்சி அடைய திட்டமிடும் இந்தியாவிற்கு, சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்கள் பெரும் வாய்ப்புகளை அள்ளிக்கொடுக்கிறது என்றே கூறலாம்.
கடந்த நான்கு முதல் ஐந்து வருடங்களில் இந்தியாவில் தங்களுடைய உற்பத்தி தளத்தை அமைத்த வெளிநாட்டு நிறுவனங்கள் ஏராளம் என்றால் அது மிகையல்ல. இதன் காரணமாக இந்தியாவின் உற்பத்தியும் அதே சமயம் ஏற்றுமதியும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த 2023-24 ஆம் நிதி ஆண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி, அதாவது மெர்கண்டைஸ் எக்ஸ்போர்ட்ஸ் மதிப்பு சுமார் 437 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது.
இது ஒரு இமாலய சாதனையாக பார்க்கப்படும் நேரத்தில், இதில் பெரும் பங்கு வகித்த மாநிலங்களில் முதல் இடத்தில் குஜராத் மாநிலம் தான் இருக்கிறது. அம்மாநிலம் இந்த ஆண்டு சுமார் 134 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. அதை தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் இவ்வருடம் 67.2 பில்லியன் டாலர் அளவிற்கான பொருட்களை ஏற்றுமதி செய்திருக்கிறது.
Today Gold Rate in Chennai: சரசரவென குறைந்த தங்கம்.. வாங்க இதுதான் சரியான நேரம்! இன்றைய நிலவரம் இதோ!
ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை மேற்குறிய இரண்டு மாநிலங்களுக்கும் எந்த வகையிலும் சளைத்தது அல்லாமல் சுமார் 43.5 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது. குறிப்பிடத்தக்க வகையில் பெரிய அளவில் வளர்ச்சி பாதையில் இருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது என்று பல ஆய்வின் முடிவுகள் கூறுகின்றது.
அந்த டாப் 3 மாநிலங்களை தொடர்ந்து கர்நாடகா சுமார் 26.6 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களையும், உத்தர பிரதேசம் 20.5 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களையும் ஏற்றுமதி செய்து வருகிறது. குஜராத்தை பொறுத்தவரை அவர்கள் பெரும் பங்கு பெட்ரோலியம் சார்ந்த பொருட்களை தான் ஏற்றுமதி செய்கின்றனர்.
சுமார் 52.91 பில்லியன் டாலர் மதிப்பிலான பெட்ரோலிய பொருட்களை குஜராத் ஏற்றுமதி செய்துள்ளது. நமது இந்திய நாட்டின் பொருளாதாரத்தின் வளர்ச்சி மற்றும் நம்மிடம் உள்ள முதலீட்டின் வலிமையை தான் இந்த சாதனைகள் மதிப்பிடுகிறது என்றே கூறலாம். உலக அளவில் ஏற்பட்டு வரும் பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் இந்த ஏற்றுமதி சாதனையை நனவாக்கி இருக்கிறது இந்தியா. மத்திய அரசின் ஏற்றுமதி இலக்கு திட்டங்கள் மூலம் நாட்டின் ஏற்றுமதி மேலும் அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது.