7th Pay Commission HRA : அண்மையில் அறிவிக்கப்பட்ட 7வது சம்பள கமிஷனில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவிகித, அதாவது 46 சதவிகிதத்தில் இருந்து 50 சதவிகிதமாக அகவிலைபடி உயர்த்தப்பட்டது அனைவரும் அறிந்ததே.
சில வாரங்களுக்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்திருந்தது மத்திய அரசு. அதன்படி ஏற்கனவே 46% இருந்த அகவிலைப்படி தற்பொழுது 4% உயர்த்தப்பட்டு ஐம்பதாக உயர்த்தப்பட்டது அனைவரும் அறிந்தது. ஆனால் இதுவரை அந்த அகவிலைப்படி உயர்வில் வீட்டு வாடகைப் படி குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த சூழலில் ஹவுஸ் ரெண்ட் அல்லவென்ஸ் என்று கூறப்படும் வீட்டு வாடகைப்படி எப்படி உயரும்? தற்பொழுது எப்படி உயர்த்தப்பட்டிருக்கிறது? என்பது குறித்தான ஒரு முழு தகவலை சட்ட அலுவலக நிறுவனர் ஒருவர் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். அதன்படி வீட்டு வாடகை படியை எப்படி கணக்கிட வேண்டும் என்ற புரிதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு இருக்க வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.
ஏப்ரல் 19ஆம் தேதி இந்த நகரங்களுக்கு மட்டும் வங்கிகளுக்கு விடுமுறை! ரிசர்வ் வங்கி அறிவிப்பு
ஒரு மத்திய அரசு ஊழியருக்கு வழங்கப்படும் வீட்டு வாடகைப்படி என்பது அந்த ஊழியர் எந்த வகையான நகரத்தில் வசிக்கின்றார் என்பதை பொறுத்து தான் அளிக்கப்படும் என்று அவர் விளக்கியுள்ளார். உதாரணமாக மத்திய அரசு ஊழியர்கள் வசிக்கும் நகரங்களை A, B, C என்று மூன்று வகையாக வகைப்படுத்திக்கொள்ளலாம்.
ஏழாவது சம்பள கமிஷனின் அகவிலைப்படி 25% எட்டிய பொழுது அவர்களுடைய வீட்டு வாடகைப் படியானது அவர்கள் வசிக்கும் நகரத்தை பொறுத்து A, B, C என்பதற்கு முறையே 27%, 18% மற்றும் 9% என்று பிரித்து வழங்கப்பட்டது. பிறகு சில வருடங்கள் கழித்து மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியானது தற்பொழுது 50 சதவீதம் என்ற அளவை எட்டி உள்ளது.
இப்பொழுது முறையே A, B, C என்று நகரங்களுக்கு 30%, 20%, 10%, இன்று அந்த வீட்டு வாடகை அகவிலைப்படியானது உயர்ந்திருக்கிறது. ஆகவே 35 ஆயிரம் ரூபாய் என்பதை அடிப்படை சம்பளமாக பெறக்கூடிய மத்திய அரசு ஊழியர்களுக்கு இனி அவர்கள் வசிக்கும் நகரங்களை பொறுத்து வீட்டு வாடகைப்படியானது 10,500 ரூபாய், 7000 ரூபாய் மற்றும் 3500 ரூபாய் என்று வழங்கப்படும் என்று அவர் தெளிவாக கூறியுள்ளார்.
இனி இவர்கள் பான் கார்டை ஆதாருடன் இணைக்க வேண்டியதில்லை.. நீங்களும் இந்த லிஸ்டில் இருக்கிறீர்களா?