
சிறு, குறு, நடுத்தரத் தொழில்களில் பெண் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் நோக்கில், சமார்த் எனும் சிறப்பு தொழில்முனைவோர் திட்டத்தை மத்திய சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.
மகளிர் தினம்
உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படும் சூழலில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சமர்த் திட்டத்தை அறிமுகம் செய்து மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் நாராயன் ரானே பேசுகையில் “குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை பெண்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது. பெண்களிடையே தொழில்முனைவோர் திறனை வளர்க்கும் முயற்சியில் எங்களின் அமைச்சகம் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. பெண்கள் முன்னேறி வருவதற்காக அவர்களுக்கு சலுகை அளிக்கும் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன
சமர்த் திட்டம்
சுய-வேலைவாய்ப்புப் பெறும் வகையில் பெண்கள் சுயமாகவும், சொந்த வருமானத்தில் நிற்கவும் சமர்த்த திட்டம் உதவும். சமர்த் திட்டத்தின் மூலம் திறன்மேம்பாட்டுத் பயிற்சித் திட்டத்தில் பெண்களுக்கு 20 சதவீத இடம் ஒதுக்கப்படும். இந்த திட்டத்தில் புதிதாக வரும் உற்சாகமிக்க பெண்களுக்கும், ஏற்கெனவே தொழிலில் இருக்கும் பெண்களுக்கும் முக்கியத்துவம் தரப்படும். 2022-23ம் ஆண்டில் இந்தத் திட்டத்தில் 7500 பெண்கள் பயன் பெறுவார்கள்.
குறு, சிறு, நடுத்தரத் தொழில்களின் வர்த்தகப் பிரிவில் இருக்கும்20 சதவீதம் பேர், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில்சார்ந்த கண்காட்சிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அவருக்கு தேவையான சந்தைப்படுத்தும் உதவிகலும் அமைச்சகம் சார்பில் செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே, தேசிய குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான மையத்தின் இயக்குர் குளோரி ஸ்வரூபா பெண் தொழில்முனைவோர் குறித்து மத்திய அரசுக்கு அளித்த அறிக்கையில் “குறு, சிறு, நடுத்தர தொழில்களில் பெண்களின் பங்கு தற்போது 12 சதவீதமாக இருக்கிறது. இதை அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 25 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
கடன் பெறுவதில் சிக்கல்
இந்தியாவில் 6.70 கோடி சிறு, குறு நடுத்தரத் தொழில்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பெண்களால் 80 லட்சம் நிறுவனங்கள் மட்டுமேஇயக்கப்படுகின்றன. பெண்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால் நிதிவசதிதான். பெண் தொழில்முனைவோர் தொழில் வளர்ச்சிக்காக கடன் கேட்டு விண்ணப்பித்தால் அது நிராகரிக்கப்படுகிறது, அல்லது கடன் மறுக்கப்படுகிறது. பல பெண்கள் கடந்த சில ஆண்டுகளாக புதிதாக ஸ்டார்ட் அப் நிறுவனங்களை எந்தவிதமான வங்கிக்கடன் உதவியின்றி தொடங்கி நடத்தி வருகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.