பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ. 329 விலையில் புதிதாக எண்ட்ரி லெவல் பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் சலுகையை அறிவித்து இருக்கிறது.
பி.எஸ்.என்.எல். நிறுவனம் புதிதாக பாரத் ஃபைபர் மாதாந்திர பிராட்பேண்ட் சலுகையை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகை விலை ரூ. 329 ஆகும். பி.எஸ்.என்.எல். அறிவித்து இருப்பதிலேயே குறைந்த விலை சலுகையாக ரூ. 329 சலுகை இருக்கிறது. பி.எஸ்.என்.எல். புதிய ரூ. 329 சலுகையில் 20Mbps வேகத்தில் இணைய சேவை வழங்கப்படுகிறது. தற்போது இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களில் மட்டும் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த சலுகையில் ஃபேர் யூசேஜ் பாலிசியாக 1000GB டேட்டா வழங்கப்படுகிறது. அந்த வகையில் 1000GB டேட்டா தீர்ந்ததும், டேட்டா வேகம் குறைக்கப்பட்டு விடும். டேட்டா மட்டுமின்றி இந்தியா முழுக்க உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை பயன்படுத்தும் வசதியும் இந்த சலுகையில் வழங்கப்படுகிறது.
undefined
புதிய பி.எஸ்.என்.எல். ரூ. 329 சலுகை தேர்வு செய்யப்பட்ட சில மாநிலங்களின் அதிகாரப்பூர்வ பி.எஸ்.என்.எல். வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு உள்ளது. அதன்படி பயனர்கள் 1000GB டேட்டாவின் 20Mbps வேகத்தில் பயன்படுத்த முடியும். அதன்பின் டேட்டா வேகம் 2Mbps ஆக குறைக்கப்பட்டு விடும்.
பி.எஸ்.என்.எல். பாரத் ஃபைபர் அடிப்படை சலுகையின் விலை ரூ. 449 ஆகும். இதில் 3300GB டேட்டா 30Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவை கடந்ததும், டேட்டா வேகம் 2Mbps ஆக குறைக்கப்பட்டு விடும். இத்துடன் நாடு முழுக்க உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் வழங்கப்படுகிறது. புதிய பி.எஸ்.என்.எல். ரூ. 329 சலுகை வரிகள் இன்றி பட்டியலிடப்பட்டு உள்ளது.
அந்த வகையில் வரிகளை சேர்க்கும் போது இந்த சலுகையின் விலை ரூ. 388 ஆக மாறிவிடும். எனினும், இந்த விலையும் மற்ற சலுகைகளை விட குறைவு தான். தற்போது சில மாநிலங்களில் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் இந்த சலுகை அனைத்து மாநிலங்களிலும் அறிவிக்கப்படலாம்.