Petrol diesel price: இப்படி செய்தால் பெட்ரோல், டீசல் விலை உயராது! முன்னாள் அதிகாரியின் ஐடியா

Published : Mar 08, 2022, 11:51 AM ISTUpdated : Mar 08, 2022, 11:57 AM IST
Petrol diesel price: இப்படி செய்தால் பெட்ரோல், டீசல் விலை உயராது! முன்னாள் அதிகாரியின் ஐடியா

சுருக்கம்

Petrol diesel price: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் 140 டாலராக அதிகரித்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகி வருகிறது. ஆனால், இந்த விலை உயர்வை மத்திய அரசு நினைத்தால் தவிர்க்கலாம் என்று நிதித்துறை முன்னாள் செயலர் அரசுக்கு ஐடியா கொடுத்துள்ளார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் 140 டாலராக அதிகரித்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகி வருகிறது. ஆனால், இந்த விலை உயர்வை மத்திய அரசு நினைத்தால் தவிர்க்கலாம் என்று நிதித்துறை முன்னாள் செயலர் அரசுக்கு ஐடியா கொடுத்துள்ளார்.

ரஷ்யா உக்ரைன் போர்

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்த போரால், அந்த நாட்டுக்கு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடைவிதித்தன. இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதியில் சிக்கல் ஏற்படுமோ என்ற அச்சத்தால் பிரன்ட் கச்சா எண்ணெய் பேரல் 140 டாலராக உயர்ந்துள்ளது. இனிவரும் நாட்களிலும் உயரும் என்றே தெரிகிறது. 

ஆனால், இந்தியாவில் 5 மாநிலத் தேர்தலையொட்டி கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து பெட்ரோல், டீசல் விலைஉயர்த்தப்படாமல் இருந்து வருகிறது. தற்போது கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்திருப்பதால் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டிய நிர்பந்தத்துக்குஆளாகியுள்ளன.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு

ஏனென்றால், கடந்தஆண்டு நவம்பர் மாதம் கச்சா எண்ணெய் விலை பேரல் 81 டாலராக இருந்தநிலையில், தற்போது பேரல் 140 டாலராக அதிகரித்துள்ளது. ஏறக்குறைய 60 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை எந்த நேரத்திலும் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிலும் வரும் 16ம் தேதிக்குள் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.12 வரை உயர்த்தினால்தான் எண்ணெய் நிறுவனங்கள் இழப்பிலிருந்து தப்பிக்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவி்க்கின்றன.

ஆலோசனை

இதனால் பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மனதில் ஓடி வருகிறது. ஆனால், கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்றார்போல் பெட்ரோல், டீசல் விலையைஉயர்த்தி மக்களுக்கு சிரமத்தைத் தராமல் பெட்ரோல் டீசல் விலை உயராமல் வைக்க முடியும் என்று மத்திய அரசு முன்னாள் அதிகாரி ஆலோசனை அளித்துள்ளார்.

முன்னாள் நிதித்துறை செயலர் சுபாஷ் கார்க், தனியார் சேனல் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவரிடம் பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தவிர்க்கவே முடியாதா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

உற்பத்தி வரி

அதற்கு சுபாஷ் கார்க் அளித்த பதிலில்  “ ஏன் தவிர்க்க முடியாது.மக்களுக்கு சுமை ஏற்றாமல், அதேநேரம் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் இருக்க முடியும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவிட்ட நிலையில் எவ்வாறு பெட்ரோல், டீசல்விலையை உயர்த்தாமல் இருக்க முடியும் எனக் கேட்கலாம். 

மத்திய அரசு நினைத்தால் பெட்ரோல், டீசல் விலையை உயராமல் பராமரிக்க முடியும். ஆனால், சிறிய பாதிப்பு என்னவென்றால், பட்ஜெட்டில் குறிப்பிட்டிருந்த வரிவசூல்இலக்கை மத்திய அரசால் அடையமுடியாது, வரிவசூல் குறையும். அதாவது பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.12 வரை மத்திய அரசு குறைத்தால், பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பில்லை.
மத்திய அரசு தனது வரிவருமானத்தை இழக்காமல்  பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியாது. எண்ணெய் நிறுவனங்களின் வருவாயும் குறையும். ஆனால், இதைவிட்டால் வேறுவழியில்லை. 

வருவாய் இழப்பு

உக்ரைன், ரஷ்யா போர் மோசமாகி வருகிறது. கச்சா எண்ணெய் பேரல் 90 டாலர்வரை மத்திய அரசால் சமாளிக்க முடியும். ஆனால், 130டாலர் முதல் 135 டாலர் வரை கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் நிலைமை கட்டுப்பாட்டை மீறி செல்கிறது என அர்த்தம். ஆதலால், நுகர்வோரை பாதிக்காமல் இருக்கும் வகையில் உற்பத்தி வரியைக் குறைக்க வேண்டும், எண்ணெய் நிறுவனங்களும் வருவாயை இழக்க வேண்டும். அனைத்தையும் நுகர்வோர் மீது சுமத்தினால் பெட்ரோல், டீசலில் பெரும் விலை உயர்வை அவர்கள் சந்திப்பார்கள். இறுதிமுடிவு மத்தியஅரசுதான் எடுக்கும்”
இவ்வாறு கார்க் தெரிவித்தார்

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

Gold Rate: நடுத்தர மக்களுக்கு கிடைத்த குட் நியூஸ்.! அடுத்த 6 மாதத்திற்கு தங்கம் விலை குறித்த கவலை வேண்டாம்.!
தங்க கடனில் புதிய விதிகள்.. ஆர்பிஐயின் அதிரடி மாற்றம்.. மக்களே நோட் பண்ணுங்க