Women's Day 2023: இந்த மகளிர் தினத்தில் உங்கள் அன்பானவர்களுக்கு பணப்பரிசு கொடுக்கிறீர்களா? வரி கிடையாது!

Published : Mar 08, 2022, 11:15 AM ISTUpdated : Mar 07, 2023, 10:00 AM IST
Women's Day 2023: இந்த மகளிர் தினத்தில் உங்கள் அன்பானவர்களுக்கு பணப்பரிசு கொடுக்கிறீர்களா? வரி கிடையாது!

சுருக்கம்

Women's Day 2023: இன்று உலக மகளிர் தினம். உங்கள் வீட்டில் உள்ள சகோதரிகள், தாய், மனைவி, தோழி ஆகியோருக்கு எவ்வளவு பணம் அன்பளிப்பாக அளிக்க முடியும் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை

இன்று உலக மகளிர் தினம். உங்கள் வீட்டில் உள்ள சகோதரிகள், தாய், மனைவி, தோழி ஆகியோருக்கு எவ்வளவு பணம் அன்பளிப்பாக அளிக்க முடியும் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை

பிறந்தநாள், திருமணநாள், பண்டிகைகளில் வீட்டில் உள்ள பெரியவர்கள் குழந்தைகளுக்கும், வயதில் சிறியவர்களுக்கும் ஆசி வழங்கி பணம் வழங்குவதை அறிந்திருக்கிறோம். ஆனால், பெரிய தொகையை பரிசாக மனைவி, சகோதரிக்கு வழங்குவதற்கு முன் சட்டப்படி எவ்வளவு தொகையை வழங்கலாம், அவ்வாறு குறிப்பிட்ட தொகைக்கு மேல் வழங்கும்போது, அதில் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்பது பலருக்கும் தெரியாது.

இதில் நிதி வல்லுநர்கள் அளித்த ஆலோசனையின்படி, கணவரோ, அல்லது சகோதரரோ வீட்டில் உள்ள பெண்களுக்கு அதிகபட்சமாக ரூ.50ஆயிரம்வரை ரொக்கமாகப் பரிசு அளிக்க முடியும். அவ்வாறு அளித்தால் அதற்கு வரி பிடித்தம், அல்லது வரிவிதிப்புக்குள் வராது. ஆனால், அதற்கு மேல் செல்லும்போது, வரி விதிப்புக்குள் வரும்.

குடும்பத்தில் கணவன் மனைவிக்குள், சகோதர, சகோதரிக்குள் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் ரொக்கமாக பரிசு வழங்க முடியும் அதற்கு தடையில்லை. ஆனால், அதை கணக்கில் கொண்டுவரும்போது, ரூ.50ஆயிரம் வரை மட்டுமே வரிவிலக்கு உண்டு.

ஆர்எஸ்எம் நிதி ஆலோசக நிறுவனத்தின் தலைவர் சுரேஷ் செய்தி நிறுவனத்துக்குஅளித்த பேட்டியில் “ வழக்கமான சூழல்களில் ரொக்கமாகஒருவருக்கு ரூ.50ஆயிரம் வரை பரிசாக வழங்கமுடியும். இதற்கு வரியில்லை. ஆனால், அதற்கு மேல் பரிசாக வழங்கினால் அது வருமானவரிச் சட்டம் 56(2)(X) பிரிவின் கீழ் வரிவிதிப்புக்குள் வரும். இது மனைவிக்குப் பொருந்தாது.  ஒருவர் தனது மனைவிக்கு எவ்வளவு வேண்டுமானாலும் ரொக்கமாகப் பரிசு வழங்கலாம். 

அதேசமயம், ஒருநபர் ரொக்கமாக ரூ.2 லட்சம்வரை பெற்றுக்கொள்ள முடியும், அதற்கு மேல், ஒரு பரிமாற்றத்தின் கீழ் பெற முடியாது. ஆதலால், யாராக இருந்தாலும் ரூ.2 லட்சம் வரை மட்டுமே ரொக்கமாக பரிசு அளிக்கலாம் அதன்பின் வங்கி மூலம் வழங்கலாம். மனைவிக்கு பரிசாக வழங்குவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்றாலும், அதைக் கணவர் ஐடி சட்டத்தின் கீழ் கணக்கில் கொண்டுவரும்போது, கணவரின் வருமானத்துக்கு வரிவிதிக்கப்படும்” எனத் தெரிவித்தார்
 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

தங்க கடனில் புதிய விதிகள்.. ஆர்பிஐயின் அதிரடி மாற்றம்.. மக்களே நோட் பண்ணுங்க
அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!