Crude oil price :ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள தடையால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயரும், ஒரு பேரல் 300 டாலரை எட்டும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.
ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள தடையால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயரும், ஒரு பேரல் 300 டாலரை எட்டும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் ரஷ்யாவில் செயல்படுத்தப்பட்டு வந்த ஜெர்மனியின் எரிவாயு குழாய் திட்டமும் மூடப்பட்டதால், எரிபொருள் விலையில் கடுமையான உயர்வை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை ரஷ்யா எச்சரித்துள்ளது.
பொருளாதாரத் தடை
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தபின் பொருளாதார ரீதியாக அந்நாட்டை முடக்கும் நோக்கில் அமெரி்க்கா,ஐரோப்பிய யூனியன் நாடுகள், பிரிட்டன், கனடா, ஜப்பான் ஆகியவை பொருளாதாரத் தடை விதித்தன. ரஷ்யாவிலிருந்து எந்தப் பொருள் இறக்குமதிச் செய்யத் தடைவிதிக்கப்பட்டது. ரஷ்ய வங்கிகள் தடை செய்யப்பட்டன, பெரும் தொழிலதிபர்கள் சொத்துக்கள் முடக்ககப்பட்டன. இதனால் டாலருக்கு எதிரான ரஷ்யாவின் ரூபிள் கரன்சி மோசமாக வீழ்ச்சி அடைந்தது.
ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை இருப்பதால் மேற்கத்திய நாடுகளில் இறக்குமதி பாதிக்கும் என்பதால், தேவைஅதிகரித்தது. இதனால் கச்சா எண்ணெய் விலையும் கடுமையாக அதிகரித்து பேரல் 140 டாலர் வரை உயர்ந்தது.
பேரழிவை் சந்திப்பீர்கள்
இந்நிலையில், ரஷ்யாவின் துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் நேற்று ஊடகங்களுக்குஅளித்த பேட்டியில், “ரஷ்யாவின் கச்சா எண்ணெயை ஒதுக்கிவைத்தால், உலகச்சந்தையில், உலகப் பொருளதாரத்தில் பேரழிவு விளைவுகளை மேற்கத்தியநாடுகளும், அமெரிக்காவும் சந்திக்க நேரிடும். கச்சா எண்ணெய் விலை எதிர்காலத்தில் எந்த அளவு உயரும் எனக் கணிக்க முடியாது.
ஒரு பேரல் 300 டாலர் அல்லது அதற்கு மேல்கூட உயரும். ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யும் அளவு கச்சா எண்ணெயை வேறு நாட்டிலிருந்து வாங்குவதற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஏறக்குறைய ஓர் ஆண்டு தேவைப்படும். அதற்குள் கச்சா எண்ணெய்க்காக அதிகமான விலை கொடுக்க நேரிடும்.
ஐரோப்பிய அரசியல் தலைவர்களும் தாங்கள் என்ன எதிர்பார்க்கிறோம் என்பது குறித்து தங்கள் குடிமக்களுக்கும் நுகர்வோருக்கும் நேர்மையாக தெரிவிக்க வேண்டும்.
ரஷ்யா எச்சரிக்கை
ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு விநியோகத்தை மேற்கத்திய நாடுகள் நிராகரிக்க விரும்பினால், பராவாயில்லை உங்கள் வழியில் செல்லலாம். எதற்கும் தயாராக இருக்கிறோம். எங்கள் கச்சா எண்ணெயையை யாரிடம் விற்பது என்பது என எங்களுக்குத் தெரியும்
இவ்வாறு நோவக் தெரிவித்தார்
அமெரிக்கா ஆர்வம்
இதற்கிடையே பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் பிரதமர்களுடன் காணொலி மூலம் பேசியஅமெரிக்க அதிபர் ஜோ பிடன், ரஷ்யா மீதான தடைக்கு ஆதரவு கோரியுள்ளார். ஒருவேளை கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு அஞ்சி ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிக்க மறுத்துவிட்டால், அமெரி்க்கா மட்டும் தனியாக தடைவிதிக்கும் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு மீது விதித்துள்ள பொருளாதாரத் தடையால் ரஷ்யாவின் பொருளாதாரம், வங்கி முறை, கரன்சி ஆகியவற்றுக்கு கடுமையான அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரஷ்யாவின் பொருளாதாரமே சீர்குலைந்துவிடும் அச்சம் நிலவுகிறது. இதனால் சர்வதேச கடன்தர ரேட்டிங் நிறுவனங்கள் ரஷ்யாவின் மதிப்பை முன்னெப்போதும் இல்லாத அளவு குறைத்துவிட்டன.