
5 மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல் இன்றுடன் முடிவதால், நாளை முதல் பெட்ரோல், டீசல் வழக்கம்போல், தினசரி மாற்றி அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 2008ம் ஆண்டுக்குப்பின் மிகப்பெரிய உச்சமாக பேரல் 140 டாலரை எட்டியுள்ளது. இதனால், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுபட்ட நிச்சயம் விலையை உயர்த்திய வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கின்றன.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெட்ரோல்,டீசல் விலை உயர்த்தாமல் நிறுத்திவைக்கப்பட்டது.ஏறக்குறைய 4 மாதங்களாக விலையை உயர்த்தாமல் எண்ணெய் நிறுவனங்கல் இழப்பை சமாளித்துவந்துள்ளன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் பேரல் 81 டாலராக இருந்தது, ஆனால், இன்று பிரன்ட் கச்சா எண்ணெய் பேரல் 140 டாலருக்கு உயர்ந்துவிட்டது.
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் வரலாறு காணாத வகையில், 76.98ஆகச் சரிந்துள்ளது. இதனால் எண்ணெய் இறக்குமதிக்கு அதிகளவில் செலவிட வேண்டிய நிலை மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
5 மாநிலத் தேர்தல் இன்றுடன் முடிந்தநிலையில் சர்வதேச சந்தை நிலவரத்துக்குஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை வரும் நாட்களில் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளதார வல்லுநர்கள், ரேட்டிங் நிறுவனங்கள் கணக்கின்படி, வரும் 16ம் தேதிக்குள் (ஹோலி பண்டிகை) பெட்ரோல், டீசலில் லிட்டருக்கு ரூ.12 உயர்த்தினால்தான், எண்ணெய் நிறுவனங்கள் வருவாய்க்கும், செலவுக்கும் சமமாக இருக்கும் நிலையை எட்டும். லாபமடைய வேண்டுமென்றால் லிட்டருக்கு ரூ.15 உயர்த்த வேண்டும்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூட சமீபத்தில் ட்விட்டில் பதிவிட்ட கருத்தில் " தேர்தல் முடிவுக்கு வருகிறது. இனிமேல் பெட்ரோல் டீசல் விலை உயரும். ஆதலால், டேங்க்கை நிரப்பிவிடுங்கள்" எனக் கிண்டல் செய்திருந்தார்.
ஆனால், சாமானிய மக்கள், நடுத்தர மக்கள் மீது பெட்ரோல் , டீசல் விலை உயர்வு விழுவதைத் தடுக்க மத்திய அரசு நினைத்தால், பெட்ரோல், டீசலுக்கான உற்பத்தி வரியைக் குறைத்தால், ஓரளவுக்கு விலையும் குறைய வாய்ப்புள்ளது.
ஆனால், சில செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட தகவலில், எண்ணெய் நிறுவனங்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள இழப்பைச் சரிக்கட்ட அடுத்துவரும்நாட்களில் பெட்ரோல், டீசலில் குறைந்தபட்சம் லிட்டருக்கு ரூ.15 முதல் ரூ.22வரை உயர்த்தப்படலாம் எனத் தெரிவித்துள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.