
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஸ்கிராம் 411 மாடலுக்கான இந்திய வெளியீடு மார்ச் 15 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்து இருக்கிறது. இதுபற்றிய அறிவிப்பு ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் இடம்பெற்று இருக்கிறது.
புதிய ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 411 மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படம், வீடியோக்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இதுதவிர புதிய மோட்டார்சைக்கிள் நிறம் பற்றிய விவரங்களும் வெளியாகி விட்டன. இத்துடன் இந்த மாடல் விற்பனையகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் புகைப்படம், ஆன்லைன் பிரவுச்சர் முதற்கொண்டு இணையத்தில் வெளியாகி விட்டன.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஸ்கிராம் 411 மாடல் ஹிமாலயன் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. முன்புற தோற்றம். பாடிவொர்க் மற்றும் மோட்டார் உள்ளிட்டவை ஹிமாலயன் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், ஸ்கிராம் 411 மாடலில் லக்கேஜ் மவுண்ட்கள் எதுவும் இடம்பெறவில்லை. இத்துடன் ஸ்கிராம் 411 மாடலில் ஆஃப் ரோடிங் வசதிகளும் சற்று குறைவாகவே இருக்கும் என தெரிகிறது.
ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 411 மாடலில் சிறிய ரக வீல் செட்டப் வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஒட்டுமொத்தத்தில் இந்த மாடல் ஹிமாலயன் சீரிசின் குறைந்த விலை எடிஷன் என கூறலாம். இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மாடல் ரூ. 2.14 லட்சம், எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் புதிய ஸ்கிராம் 411 விலை சற்று குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.