எம்எஸ்சிஐ இன்டெக்சில் இருந்து நீக்கம் செய்யப்பட்டஅதானி பங்குகள்; காரணம் என்ன?

By Dhanalakshmi GFirst Published May 12, 2023, 5:19 PM IST
Highlights

இந்த குழுமத்தின் இரண்டு பங்குகளான அதானி டிரான்ஸ்மிஷன் மற்றும் அதானி டோட்டல் கேஸ் ஆகியவை மே 31 முதல் MSCI குளோபல் ஸ்டாண்டர்ட் இண்டெக்ஸிலிருந்து வெளியேற்றப்படுகிறது.

அதானி குழுமத்தின் 2 நிறுவனங்கள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன. இந்தக் குழுவின் இரண்டு பங்குகளான அதானி டிரான்ஸ்மிஷன் மற்றும் அதானி டோட்டல் கேஸ் ஆகியவை MSCI குளோபல் ஸ்டாண்டர்ட் இன்டெக்ஸில் இருந்து நீக்கப்படுகிறது.  MSCI தனது காலாண்டு குறியீட்டு மதிப்பாய்வில் இதை அறிவித்துள்ளது. MSCI-ன் இந்த முடிவு மே 31, 2023 முதல் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

MSCI இன்டெக்ஸ் வெளியேறினால் இந்த 2 பங்குகளில் இருந்து பணம் எடுக்கலாம்.

MSCI குளோபல் ஸ்டாண்டர்ட் இண்டெக்ஸில் இருந்து பங்குகள் நீக்கப்பட்டால் இரண்டு அதானி குழும நிறுவனங்களில் இருந்து முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை திரும்பப் பெறலாம். நாமா ஆல்டர்நேட்டிவ் அண்ட் குவாண்டிடேட்டிவ் ரிசர்ச் அறிக்கையின்படி, அதானி டிரான்ஸ்மிஷனில் இருந்து 201 மில்லியன் டாலர்களும், அதானி டோட்டல் கேஸில் இருந்து 186 மில்லியன் டாலர்களும் திரும்பப் பெறலாம் என்று தெரிய வந்துள்ளது.

லாபத்தை அள்ளித் தரும் முதலீடு: 500 ரூபாய்க்குள் டாப் 5 மிட் கேப் பங்குகள்

MSCI குறியீட்டிலிருந்து நீக்கப்பட்ட அதானி குழுமத்தின் இந்த இரண்டு பங்குகளும் வெள்ளிக்கிழமை  சரிவைக் கண்டன. அதானி டோட்டல் கேஸ் 5% குறைந்து ரூ. 812 அளவில் வர்த்தகம் செய்யும்போது, ​​அதானி டிரான்ஸ்மிஷன் 4%க்கும் அதிகமாக குறைந்து ரூ.878 அளவில் வர்த்தகமாகிறது. ஆனால், வியாழக்கிழமை இந்த இரண்டு பங்குகளும் ஏற்றத்துடன் முடிவடைந்து இருந்தன. 

அதானி டோட்டல் கேஸ் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் பங்குகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து முறையே 78 சதவீதம் மற்றும் 66 சதவீதம் சரிவைச் சந்தித்தன. அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையில், அதானி குழுமத்தின் பங்குகள் போலியாக கூடுதல் மதிப்பீடு செய்யப்பட்டு, வர்த்தகம் செய்யப்பட்டது என்று தெரிவித்து இருந்தது. இதையடுத்து, அதானி டோட்டல் கேஸ் மற்றும் அதானி ட்ரான்ஸ்மிஷன் பங்குகள் இந்த ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதியன்று முறையே ரூ.3,892.50 ஆகவும், செப்டம்பர் 16, 2022 அன்று ரூ. 4,090.50 ஆகவும் சரிந்தன. அதாவது தலா 79 சதவீதம் சரிந்தன. வெள்ளிக்கிழமை இரு பங்குகளும் சுமார் 5 சதவீதம் சரிந்தன.

லாபத்தை அள்ளித் தரும் முதலீடு: 500 ரூபாய்க்குள் டாப் 5 மிட் கேப் பங்குகள்

click me!