most liveable city in the world: வாழ்ந்தா இங்க வாழணும்! உலகிலேயே வாழத் தகுதியான முதல் 10 நகரங்கள் பட்டியல்?

By Pothy Raj  |  First Published Jun 24, 2022, 12:52 PM IST

most liveable city in the world :உலகிலேயே வாழத் தகுதியான நகரங்கள் பட்டியல், வாழ்வதற்கு குறைந்த தகுதியுள்ள நகரங்கள் பட்டியலை தி எக்னாமிஸ்ட் இன்டலஜென்ஸ் யூனிட் வெளியிட்டுள்ளது.


உலகிலேயே வாழத் தகுதியான நகரங்கள் பட்டியல், வாழ்வதற்கு குறைந்த தகுதியுள்ள நகரங்கள் பட்டியலை தி எக்னாமிஸ்ட் இன்டலஜென்ஸ் யூனிட் வெளியிட்டுள்ளது.

தி எக்னாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் அமைப்பு கடந்த பிப்ரவரி 14 முதல் மார்ச் 13ம் தேதிவரை 173 நாடுகளில் ஆய்வு நடத்தி, உலகளவில் வாழத் தகுதியான நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. தி கோலோபல் லிவ்வபிலிட்டி இன்டஸ்-2022 என்ற தலைப்பில் நகரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

Latest Videos

undefined

இதில், நகரங்களின் கலாச்சாரம், சுற்றுச்சூழல், காற்றின்தரம், மக்களுக்கான மருத்துவ, சுகாதார வசதிகள், குற்றச்சம்பவங்கள், அரசியல்நிலைத்தன்மை, வாழ்க்கைத்தரம்,ஊதியம், வேலை, மகிழ்ச்சி, கல்வி, வேலைவாய்ப்பு, சுததந்திரம்  ஆகியவை கணக்கில் எடுக்கப்பட்டு ஆய்வுநடத்தப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் முதல் 11 இடங்களில் ஐரோப்பிய நாடுகள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆஸ்திரியாவின் வியன்னா நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2-வது இடத்தை டென்மார்க்கின் கோபஹென் நகரம் பிடித்துள்ளது. 

ஸ்விட்சர்லாந்து நாட்டின் இரு நகரங்கள் முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ளன. ஜூரிச் நகரம் 3-வது இடத்திலும், ஜெனிவா நகரம் 6-வது இடத்திலும் இடம் பெற்றுள்ளன.

கனடா நாட்டின் 3 நகரங்கள் டாப்-10 பட்டியலில் இடம் பெற்றுள்ளன. கால்காரி நகரம் 4-வது இடத்தையும், தலைநகர் வான்கூவர் நகரம் 5-வது இடத்தையும், டொரோன்டோ 8-வது இடத்தையும் பிடித்துள்ளன. 

ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரம் 7-வது இடத்தை அடைந்துள்ளது. நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரம் 9-வது இடத்தையும், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரமும், ஜப்பானின் ஒசாகாவும் 10வது இடத்தைப் பகிர்ந்துள்ளன.

மிகப்பெரிய சரிவு
கடந்த 2021ம் ஆண்டில் முதலிடத்தில் இருந்த நியூஸிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரம் இந்த ஆண்டு டாப்10 நகரங்கள் பட்டியலுக்குள்ளேயே வரவில்லை. 34வது இடத்துக்கு தள்ளப்பட்டது. 

ஆஸ்திரேலியாவும் தரவரிசையில் பின்தங்கியிருக்கிறது. கடந்த ஆண்டு டாப் 3 இடங்களில் இருந்த மெல்போர்ன் நகரம் 10-வது இடத்துக்கு பின்தங்கியது. 2021ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்போன், அடிலெய்ட், பெர்த் ஆகிய நகரங்கள் டாப்10 நகரங்களில் இருந்தன. ஆனால், 2022ம் ஆண்டில் பிரிஸ்பேன் 27-வது இடத்துக்கும், அடிலெய்ட் 30-வது இடத்துக்கும், பெர்த் 32-வது இடத்துக்கும் சரிந்தன.

நியூஸிலாந்து தலைநகரம் வெல்லிங்டன் கடந்த ஆண்டு 4-வது இடத்தில் இருந்தநிலையில், இந்த ஆண்டு டாப்-10 வரிசையில்கூட இல்லை. 2022ம் ஆண்டில் ஐரோப்பிய நாடுகள்தான் அதிகமாக பட்டியலில் இடம் பெற்றுள்ளன. ஆனால், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லண்டன், பாரிஸ் நகரங்கள் இல்லை. 

வாழத்தகுதியற்ற, தரம் குறைந்த நகரங்கள் பட்டியலும் உள்ளன. அதில் முதலிடத்தில் சிரியாவின் டாமஸ்கஸ் நகரம் 172வது இடத்தைப் பிடித்துள்ளது.

171-வது இடத்தை நைஜீரியாவின் லாகோஸ் நகரமும், 170-வது இடத்தை லிபியாவின் திரிபோலி நகரமும் பிடித்துள்ளன. 169வது இடத்தில் அல்ஜீரியாவின் அல்ஜீயர்ஸ் நகரமும், 168-வது இடத்தில் பாகிஸ்தானின் கராச்சி நகரமும் உள்ளன.

167-வது இடத்தில் பப்புவா நியூ கினியாவின் போர்ட் மோரஸ்பை நகரமும், 166-வது இடத்தில் வங்கதேசத்தில் தாகா நகரமும், 165வது இடத்தில் ஜிம்பாப்வேயின் ஹராரே நகரமும் உள்ளன. 164வது இடத்தில் கேமரூனின் டோவுலாவும், 163-வது இடத்தில் ஈரானின் டெஹ்ரான் நகரமும் உள்ளன.


 

click me!