gold rate today: ஊசலாடும் தங்கம் விலை: 80 ரூபாய் வித்தியாசத்தில் ஏற்ற இறக்கம்: இன்றைய நிலவரம் என்ன?

By Pothy RajFirst Published Jun 24, 2022, 10:28 AM IST
Highlights

gold rate today: ஆபரணத் தங்கம் விலை கடந்த ஒருவாரமாகவே கடும் ஊசலாட்டத்துடன் இருந்து வருகிறது. அதிலும் சவரணுக்கு 80 ரூபாய் வித்தியாசத்தில் ஏறவும், இறக்கவும் இருக்கிறது. இன்றும்தங்கத்தின் விலையில் ஊசலாட்டம் காணப்படுகிறது

ஆபரணத் தங்கம் விலை கடந்த ஒருவாரமாகவே கடும் ஊசலாட்டத்துடன் இருந்து வருகிறது. அதிலும் சவரணுக்கு 80 ரூபாய் வித்தியாசத்தில் ஏறவும், இறக்கவும் இருக்கிறது. இன்றும்தங்கத்தின் விலையில் ஊசலாட்டம் காணப்படுகிறது

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூன்24) குறைந்துள்ளது. சென்னையில்  இன்று காலை தங்கம் கிராம் ஒன்றுக்கு 20 ரூபாயும், சரணுக்கு 160 ரூபாயும் சரிந்துள்ளது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய நிலவரப்படி கிராம் ரூ.4,7655க்கும், சவரண் ரூ.38,120க்கும் விற்பனையானது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.4,745 ஆகவும், சவரணுக்கு, ரூ. 160 குறைந்து, ரூ.37 ஆயிரத்து960க்கும் விற்பனையாகிறது. 

தங்கத்தின் விலை கடந்த 7 நாட்களாக கடும் ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சவரண் விலை ரூ.80 ஏற்றத்திலும், இறக்கத்திலுமே கடந்த 7 நாட்களாக இருந்து வருகிறது. 

கடந்த 17ம் தேதிமுதல் இருமுறை தங்க நகை சவரண் ரூ.38,200 விலையைத் தொட்டது. 4 முறை சவரண் ரூ.38,120 விலையை தொட்டது. 2முறை சவரண் ரூ.37,960 விலையை தொட்டுள்ளது. ஆக கடந்த ஒரு வாரத்தில் தங்கம் சவரணக்கு 80 ரூபாய் உயர்ந்தும், குறைந்துமே ஊசலாட்டத்துடனே இருந்து வருகிறது.

தங்கத்தில் விலையில் பெரிதாக உயர்வு இல்லாத நிலையில் அதில்  முதலீடு செய்வது சரியானதாக இருக்கும் சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

வெள்ளி விலை தொடர்ந்து 3வது நாளாக மாற்றமில்லாமல் இருக்கிறது. வெள்ளி கிராம் ரூ.66.00க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிலோ ரூ.66,000க்கு  விற்பனையாகிறது. கடந்த 22ம் தேதி முதல் வெள்ளி கிலோ ரூ.66,000 விலையிலேயே நீடித்து வருகிறது


 

click me!