Pradhan Mantri Garib Kalyan Anna Yojana (PMGKAY) : வரும் செப்டம்பர் மாதத்துடன் பிரதான் மந்திரி கரீப் கல்யான் யோஜனா திட்டத்தை நீட்டிப்பது சரியானதல்ல, எந்தவிதமான வரிக்குறைப்பும் செய்வது அரசின் நிதி நிலையை பாதிக்கும் என்று மத்திய அரசுக்கு நிதிஅமைச்சகத்தின் செலவீனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
வரும் செப்டம்பர் மாதத்துடன் பிரதான் மந்திரி கரீப் கல்யான் யோஜனா திட்டத்தை நீட்டிப்பது சரியானதல்ல, எந்தவிதமான வரிக்குறைப்பும் செய்வது அரசின் நிதி நிலையை பாதிக்கும் என்று மத்திய அரசுக்கு நிதிஅமைச்சகத்தின் செலவீனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தனால் செப்டம்பர் மாதத்துக்குப்பின் ஏழை மக்களுக்கு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச உணவு தானியங்கள் வவங்கப்படுமா அல்லது இல்லையா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது
அவ்வாறு கரீப் கல்யான் யோஜனா திட்டத்தை செப்டம்பர் மாதத்துக்கு மேல் நீட்டித்தாலோ அல்லது வரிக்குறைப்பு ஏதும் செய்தாலோ மத்தியஅரசின் நிதிநிலைக்கு பெரும் சிக்கல் நேரும் என எச்சரித்துள்ளது.
கொரோனா லாக்டவுன் காலத்தில் வேலையில்லாத சூழலில் ஏழை மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்களை ரேஷன் கடைகள் மூலம் வழங்க பிரதான் மந்திரி கரீப் கல்யான் யோஜானா கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தை வரும் செப்டம்பர் வரை நீட்டித்து கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு அறிவித்தது.
இதற்காக நடப்பு நிதியாண்டில் உணவு மானியத்துக்காக மத்திய அரசு ரூ.2.07 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது. செப்டம்பர் வரை கரீப் கல்யான் திட்டம் நீட்டிக்கப்பட்டிருப்பதால், ரூ.2.87லட்சம் கோடி செலவாகும் என ஆங்கில நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது.
ஆனால், செப்டம்பர் மாதத்துக்கு பின்பும் கரீப் கல்யான் திட்டத்தை மத்திய அரசு நீட்டித்தால் அரசுக்கு அடுத்த 6 மாதங்களுக்கு கூடுதலாக ரூ.80ஆயிரம் கோடி செலவாகும். உணவுக்கான மானியம் ரூ.3.70 லட்சம் கோடியாக இந்த நிதியாண்டு அதிகரிக்கும்.
இந்நிலையில் நிதிஅமைச்சகத்தின் செலவீனத்துறை அளித்துள்ள அறிக்கையில், “ வரும் செப்டம்பர் மாதத்துக்குப்பின் இலவச உணவு தானியத் திட்டத்தை நீட்டிப்பது சரியானது அல்ல. வேறு புதிதாக எந்த வரிக்குறையும் செய்யவதும்அரசின் நிதிநிலைக்கு உகந்தது அல்ல. அவ்வாறு செய்தால், மத்திய அரசு பெரும் நிதிச்சிக்கலில் சிக்க நேரிடும்” எனத் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு சமீபத்தில் இலவச ரேஷன் திட்டம், உரத்துக்கான மானியம் உயர்வு, சமையல் எரிவாயுக்கான மானியம் மீண்டும் அறிமுகம், பெட்ரோல், டீசலில் உற்பத்தி வரிக்குறைப்பு, சமையல் எண்ணெயில் சுங்கவரிக்குறை போன்றவை அரசின் நிதிநிலைக்கு பெரும் சிக்கலை உருவாக்கும். பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ6, டீசல் லிட்டருக்கு ரூ.8 உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்ததால், அரசுக்கு ரூ.ஒரு லட்சம் கோடி இழப்பு ஏற்படும். அதுமட்டுமல்லாமல் எல்பிஜி மானியமும் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.200 வழங்கியதும் நிதிநிலையில் பெரும்பள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
பட்ஜெட்டில் ஜிடிபியில் நிதிப்பற்றாக்குறையை 6.4 சதவீதத்துக்குள் வைத்திருக்க பட்ஜெட்டில் இலக்கு வைக்கப்பட்டது. ஆனால், மத்தியஅரசின் அதிகமான மானியத்தால் நிதிப்பற்றாக்குறை 6.8 சதவீதம் வரை உயரக்கூடும் என பிட்ச் ரேட்டிங் தெரிவித்துள்ளது.