
மாருதி சுசுகி லிமிடெட் நிறுவனம் இந்த ஆண்டு துவக்கம் முதலே புதிய கார் மாடல்களை தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வருகிறது. இரண்டாம் தலைமுறை செலரியோ, புதிய பலேனோ என மற்றும் 2022 வேகன்ஆர் என தொடர்ந்து புது கார்களை அறிமுகம் செய்வதில் மாருதி சுசுகி பிசியாகி இருக்கிறது. இந்த நிலையில், மற்றொரு புதிய காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய மாருதி சுசுகி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி 2022 மாருதி சுசுகி எர்டிகா மாடல் மார்ச் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக இந்த 7 சீட்டர் மாடல் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படும் படங்கள் மற்றும் வீடியோக்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில் புதிய எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் சிறிதளவு காஸ்மெடிக் மாற்றங்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எம்.பி.வி. மாடலாக எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் இருந்து வருகிறது. புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய கிரில் இன்சர்ட்கள், ப்ரோஜெக்டர் ஹெட்லைட்கள், பொனெட், V வடிவ அலாய் வீல்கள், C வடிவ ஃபாக் லேம்ப் ஹவுசிங், வால்வோ சார்ந்து உருவாக்கப்பட்ட டெயில் லேம்ப் டிசைன், பக்கவாட்டில் பாடி பேனல்கள், உள்ளிட்டவை தற்போதைய மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது.
உள்புறமும் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு ஸ்மார்ட் பிளே ஸ்டூடியோ தொழில்நுட்பம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் K15B பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 105 பி.எஸ். பவர், 138 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் யூனிட் விரும்புவோர் தேர்வு செய்யும் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.
புதிய டிரான்ஸ்மிஷன் வசதி பெறும் இந்தியாவின் முதல் மாடலாக 2022 மாருதி சுசுகி எர்டிகா இருக்கும் என தெரிகிறது. இதே ஆப்ஷன் இரண்டாம் தலைமுறை பிரெஸ்ஸா மற்றும் மேம்பட்ட XL6 உள்ளிட்ட மாடல்களிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பிரெஸ்ஸா மாடல் ஏப்ரல் மாதத்திலும், மேம்பட்ட XL6 மாடல் இந்த ஆண்டு மத்தியிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.