
மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2022 பலேனோ மாடல் சில தினங்களுக்கு முன் தான் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், புதிய தலைமுறை பலேனோ மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் டொயோட்டா கிளான்சா சோதனை நடைபெற்று வருகிறது. டொயோட்டா கிளான்சா ரி-பிராண்டு செய்யப்பட்ட பலேனோ மாடல் ஆகும்.
சமீபத்தில் புதிய கிளான்சா மாடல் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தன. அதன்படி இந்த மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. எனினும், இதுபற்றி டொயோட்டா சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
பியல் வைட் நிறத்தாலான கிளான்சா மாடல் புதிய டெயில் லேம்ப்களுடன் சோதனை செய்யப்படுகிறது. இதன் பம்ப்பர் 2022 பலேனோ மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. இந்த மாடலில் வித்தியாசமான பம்ப்பர், அகலமான ஏர் இன்லெட்கள், மேம்பட்ட முன்புற கிரில், டுவீக் செய்யப்பட்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்படுகிறது.
புதிய கிளான்சா உள்புற அம்சங்கள் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனினும், புதிய கிளான்சா மாடலில் 2022 பலேனோ மாடலில் வழங்கப்பட்ட அம்சங்களையே கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். அந்த வகையில் இந்த மாடலில் பெரிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, ஹெட்-அப் டிஸ்ப்ளே, ஃபிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல், பின்புறம் ஏர்கான் வெண்ட்கள், புதிய HVAC கண்ட்ரோல்கள், ஆட்டோ-டிம்மிங் IRVM-கள் வழங்கப்படலாம்.
புதிய கிளான்சா மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினஅ வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 89 பி.ஹெச்.பி. திறன், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் ஐடில் ஸ்டார்ட் / ஸ்டாப் அம்சம் வழங்கப்படுகிறது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது CVT யூனிட் வழங்கப்படலாம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.