
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் போர் ஏற்பட்டபின்புதான் தெரிந்தது அங்கு 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் படித்துவருகிறார்கள். அதிலும் பெரும்பாலான மாணவர்கள் மருத்துவம் பயில்வதற்கு உக்ரைன் செல்லக் காரணம் என்ன என்பதை இந்த செய்தி விளக்குகிறது
கடந்த 24ம் தேதி உக்ரைனை ரஷ்யா தாக்கத் உக்ரைனில் மக்கள் வெளியேறத் தொடங்கினர். ஆனால், அங்கு பயிலும் இந்திய மாணவர்கள் நிலைதான் கேள்விக்குறியானது. தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள மெட்ரோ ரயில்நிலையங்களிலும், பதுங்கு குழிகளிலும், சுரங்கப்பாதைகளிலும் பதுங்கி உயிர்பிழைத்து வருகிறார்கள். இந்தியாவில் இல்லாத கல்வியா, கல்விநிலையங்களாக ஏன் உக்ரைன் போன்ற சிறிய நாடுகளுக்குச் சென்று இந்திய மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
இந்தியாவிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 20ஆயிரம் முதல் 25ஆயிரம் மாணவர்கள் உக்ரைனுக்கு கல்விக்காகச் செல்கிறார்கள். இதில் பெரும்பாலும் மருத்துவம் படிக்கவும், பொறியியல் படிக்கவும் மாணவர்கள் செல்கிறார்கள். இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளே இல்லையைா, பொறியியல் கல்லூரிகளே இல்லை என்று கேட்டால் இருக்கிறது. ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கும் கட்டணம் மிகமிக அதிகம்.
ஆனால், உக்ரைனில் மருத்துவத்துக்கான கல்விக்கட்டணம் இந்திய மருத்துவக் கல்லூரியோடு ஒப்பிடுகையில் மிகக் குறைவு. உக்ரைனில் நான்கரை ஆண்டுகள் மருத்துவம் படித்து முடித்து வெளியேவர ஒரு மாணவருக்கு ரூ.24 முதல் ரூ.30 லட்சம்தான் செலவாகும். ஆனால், இந்திய தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நன்கொடை மட்டுமே ரூ.50 லட்சம் அதன்பின் படிப்புச் செலவு என பல லட்சங்களில் முடியும்.
உக்ரைனோடு ஒப்பிடுகையில் மொரிஷியஸ், நெதர்லாந்தில்கூட மருத்துவம் படிக்க கல்விக்கட்டணம் அதிகம். அதாவது ரூ.50 முதல் ரூ.55லட்சம் செலவாகும்.
2021ம் ஆண்டில் இந்தியாவில் 15லட்சம் மாணவர்கள் நீட்தேர்வு எழுதினர். இதில் 88,120 இடங்களில் 50ஆயிரம் இடங்கள் 313 அரசுக் கல்லூரிக்குச் சென்றுவிடும். மீதமுள்ள தனியார் மருத்துவக்க ல்லூரிக்குத்தான் கடும் போட்டி நிலவும்.
இந்தியாவில் நீட்தேர்வில் தேர்வாகி, அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காத மாணவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் செலவைவிட, வெளிநாட்டில் சென்று படித்தால் செலவும் குறைகிறது, படிப்பையும் முடிக்க முடிகிறது என்று நம்புகிறார்கள்.
இதனால்தான் கல்விக்கான ஆலோசகர்கள், நெதர்லாந்து, ரஷ்யா, சீனா, சோவியத்யூனியன் நாடுகள், மொரிஷியஸ், நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான் சென்றுகூட மருத்துவம் படிக்கிறார்கள்.
டெல்லியில் குருகலம் எனும் கல்விஆலோசனை மையம் நடத்தும் நீரஜ் சவுரேஷியா கூறுகையில் “ இந்திய மாணவர்கள் நீட் தேர்வு எழுதி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காவிட்டால், தனியார் கல்லூரியில் சேர்வதைவிட வெளிநாடு செல்ல ஆர்வம் காட்டுகிறார்கள்.
குறிப்பாக உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், கிரிகிஸ்தான் ஆகிய நாடுகளில் மருத்துவம் பயில்கிறார்கள். இங்கு தங்குமிடம், உணவு, கல்விச்செலவு சேர்த்தே ரூ.25 லட்சத்துக்குள்தான் செலவாகும். ஆனால், ஏராளமான மாணவர்கள் உக்ரைன் சென்று மருத்துவம் படிக்கவே விரும்புகிறார்கள்.
ஏனென்றால், உக்ரைன் தேசம், ஐரோப்பிய நாடுகளுடன் நெருக்கமான உறவு வைத்துள்ளது, உக்ரைனில் மருத்துவம் பயின்று தேர்ச்சி பெற்ற சான்றிதழ்களை ஐரோப்பிய நாடுகள் ஏற்கின்றன. இனால், உக்ரைனில் மருத்துவம் படித்துமுடித்தால் எளிதாக ஐரோப்பிய நாடுகளில் செட்டிலாகிவிடலாம் என மாணவர்கள் நம்புகிறார்கள்.
உக்ரைனில் மருத்துவம் முடித்தால், மாணவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு எளிதாக நுழைந்துவிடலாம், ஜெர்மனியில் உயர்கல்வி பயில முன்னுரிமையும் கிடைக்கிறது. இதனால்தான் இந்திய மாணவர்கள், ஆங்கிலம் பேசாத கீழை நாடுகளில்கூட மருத்துவம் படிக்கச் செல்கிறார்கள். தகவல் அறியும் உரிமைச்ச ட்டத்தின்படி, வெளிநாட்டில் மருத்துவம் பயின்று இ்ந்தியா திரும்பிய மாணவர்களில் 10 சதவீதம் பேர்தான் தேசிய கல்விவாரியத் தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள்.
வெளிநாட்டில் மருத்துவம் பயின்றுவந்தவர்கள் இந்தியாவில் இந்தத் தேர்வுஎழுதி தேர்ச்சி பெற்றால்தான் மருத்துவச் சேவை செய்ய முடியும். உக்ரைனில் 10க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளை அரசே நடத்துகிறது. அங்குள்ள கல்லூரிகளில் ஏராளமான இந்தியர்கள் பயில்கிறார்கள்.
உக்ரைன் ரஷ்யப் போரில் ஏறக்குறைய 15ஆயிரம் இந்திய மாணவர்கள் உக்ரைனின் பல்வேறு நகரங்களில் சிக்கியிருக்க வேண்டும். இதில் 90 சதவீதம் பேர் மருத்துவம் பயிலச் சென்றவர்கள்”
இவ்வாறு நீரஜ் தெரிவித்தார்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.