
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மாம்பழங்கள் உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாட்டிலேயே உத்தரப் பிரதேசத்தில் அதிக அளவில் மாம்பழம் உற்பத்தி செய்யப்படுகிறது.இந்தியாவின் மிகப்பெரிய மாம்பழ உற்பத்தி மாநிலமான உத்தரப் பிரதேசத்தில், மாம்பழங்களின் விலை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் மூன்றில் ஒரு பங்கு வரை குறைந்துவிட்டது. முக்கியமான அதிக சுவையுடையதாக கருதப்படும் தசேரி வகை மாம்பழங்களின் விலை கடந்த ஆண்டு கிலோக்கு ரூ.60 இருந்தது, தற்போது ரூ.40-45க்கு வீழ்ந்துள்ளது.
உற்பத்தி அதிகரிப்பு – விலை குறைவு
இந்த ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் மாம்பழ உற்பத்தி 35 லட்சம் மெட்ரிக் டன் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டு 25 லட்சம் மெட்ரிக் டன் ஆக இருந்ததை விட அதிகம். போதிய பருவமழை, சாதகமான வானிலை ஆகியவற்றால் மாம்பழ உற்பத்தி பம்பர் லாட்டரி சீட்டாக விளைந்துள்ளதாக இந்திய மாம்பழ உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் இன்ஸ்ராம் அலி கூறினார்.
காலையில் பறிப்பு – பருவமழையை தவிர்க்க
இந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரை அதிக மழை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணிக்கையிட்டதால், விவசாயிகள் மாம்பழங்களை முன்பே பறித்துள்ளனர். இதுவும் விலை குறைவுக்கு ஒரு முக்கிய காரணம் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வரும் வாரங்களில் விலை அதிகரிக்கும் என பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், சந்தைகளில் மாம்பழங்கள் கொட்டி கிடப்பதால் அதற்கு வாய்ப்பு குறைவு என வியாரிகள் கூறியுள்ளனர்.
தென் இந்தியாவில் நிலைமை இதுதான்
ஆந்திராவின் திருப்பதி மற்றும் சித்தூர் மாவட்டங்களில் விளையும் தோடாபுரி வகை மாம்பழங்களின் விலையும் வீழ்ந்துள்ளது. மாம்பழக் கூழ் தயாரிப்பாளர்கள் இன்னும் பழங்களை வாங்க தொடங்கவில்லை எனவும் விலை மேலும் சரிவடையும் என அவர்கள் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேற்குவங்க மாம்பழங்கள்
கோல்கத்தாவைச் சேர்ந்த வணிகர் பிரசாந்த் பாலின் கூற்றுப்படி, விலையுயர்ந்த மாம்பழங்களின் விலை ரூ.80 லிருந்து ரூ.45-50 ஆக குறைந்துள்ளது. இங்கும் அறுவடை முன்பே செய்ததால் விலை வீழ்ந்தது என்கின்றனர் விவசாயிகள்.
உலகளாவிய நிலவரம்
2024-இல், உலகளவில் 25 மில்லியன் டன் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இதில் இந்தியா மட்டும் 50% உற்பத்தியை கொண்டுள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள சீனா 3.8 மில்லியன் டனும் மூன்றாவது இடத்தில் உள்ள இந்தோனேஷியா 3.6 மில்லியன் டன்னும் மாம்பழங்களை உற்பத்தி செய்துள்ளன. உத்தரப் பிரதேசம் மட்டும் இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 20% பங்கெடுத்துள்ளது. அதிக உற்பத்தி, பருவமழையைத் தவிர்க்க முன்கூட்டியே அறுவடை செய்தல் மற்றும் மாம்பழ கூழ் தயாரிப்பாளர்கள் பழங்களை வாங்க மறுத்தல் ஆகியவை மாம்பழ விலை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணங்கள் ஆகும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.