
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சர்வதேச பொருளாதார நெருக்கடிகள் காரணமாக கடந்த சில மாதங்களாகத் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் தங்கம் விலை உச்சம் தொட்டது. ஆனால் மே மாதத்தில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தைக் கண்டது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை சமீபத்தில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. இதனையடுத்து, தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது.அந்த வகையில், தங்கம் விலை நேற்று (ஜுன் 11) கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.9,020-க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.72,160-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.119-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
தங்கம் விலையில் இந்த வாரம் தொடக்கம் முதலே ஏற்றம் காணப்படுகிறது. சர்வதேச சந்தைகளில் பெரிய மாற்றம் காணப்படவில்லை என்றாலும், முதலீட்டாளர்கள் உலோக பங்குகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டியதால், கமாடிட்டி மார்கெட் நல்ல லாபத்தை கொடுத்தன.நிலையான லாபத்தை விரும்பும் முதலீட்டாளர்கள் தங்கம், வெள்ளி உள்ளிட்ட உலோகங்களில் முதலீடுகளை அதிகப்படுத்தி வருகின்றனர். இதனால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஏற்றத்தில் காணப்படுகிறது.
சர்வதேச சந்தையின் தாக்கம் மற்றும் அடுத்த இரண்டு வாரங்களில் இந்தியாவில் முகூர்த்த நாட்கள் தொடங்குவதால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தங்க நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வெள்ளியின் விலை மாற்றம் இல்லாமல் இருந்தாலும், தங்கத்திற்கு அடுத்தப்படியாக நடுத்தர வர்க்கத்தினர் வெள்ளியை தேர்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், தங்கம் விலை இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.9,100-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.72,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.119-க்கும், ஒரு கிலோ ரூ.1,19,000க்கும் விற்பனையாகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.