குஜராத்தில் உள்நாட்டு ஸ்டென்ட் தயாரிப்பாளர்களுக்கு எதிரான பாரபட்சம் களையப்பட்டது. இரட்டை விலை நிர்ணய உத்தரவை அரசு ரத்து செய்தது, மேக் இன் இந்தியா முயற்சிக்கு கிடைத்த வெற்றி.
Made in India stents got victory: குஜராத்தின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, உள்நாட்டு ஸ்டென்ட் தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாரபட்சமாக நடந்து கொண்டது. முன்னாள் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மண்டாவியா மற்றும் குஜராத்தின் சுகாதார அமைச்சர் ருஷிகேஷ் கணேஷ்பாய் படேல் ஆகியோரின் உடனடி தலையீட்டினால் இந்தப் பிரச்னைக்கு முடிவு கட்டப்பட்டது. AiMeD (இந்திய மருத்துவ சாதனத் தொழில் சங்கம்) அவர்களின் தலையீட்டையும், ஸ்டென்ட்களுக்கான இரட்டை விலை நிர்ணய உத்தரவை ரத்து செய்வதற்கான குஜராத் அரசின் முடிவையும் பாராட்டியுள்ளது.
மேக் இன் இந்தியா திட்டமும் ஸ்டென்ட் தயாரிப்பும்:
பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா நடவடிக்கைக்கான மிகப்பெரிய வெற்றி குறித்து AiMeD-ன் மன்ற ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் நாத் மகிழ்ச்சி தெரிவித்தார்.‘குஜராத் அரசாங்கத்திற்கும் சுகாதார அமைச்சர் ஸ்ரீ ருஷிகேஷ் கணேஷ்பாய் படேலுக்கும், ஸ்ரீ மன்சுக்பாய் மண்டாவியாவுக்கும் நாங்கள் கோரிக்கை விடுத்து இருந்தோம். அதன் பேரில் உடனடியாக செயல்பட்டு, குஜராத் அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையால் இருதய ஸ்டென்ட்களுக்கான பாரபட்சமான வேறுபட்ட விலை நிர்ணய உத்தரவை ரத்து செய்வதாக உறுதியளித்துள்ளனர். இதற்காக நாங்கள் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
பிரதமரின் ஆத்ம நிர்பர் பாரத்
இது, மேக் இன் இந்தியா முயற்சிகளை ஆதரிப்பதற்கும், இந்திய ஸ்டென்ட் சந்தையில் 70% க்கும் அதிகமான சந்தையை கட்டுப்படுத்தும் உள்நாட்டு தொழில்துறையில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் இது ஒரு முக்கிய படியாக இருக்கும். மேலும் குஜராத்தை தளமாகக் கொண்ட மெரில், எஸ்எம்டி, ஏஎம்எஸ், எஸ்எல்டிஎல் போன்ற பல உற்பத்தியாளர்களுக்கு இது மிகவும் முக்கியமானது. பிரதமரின் ஆத்ம நிர்பர் பாரத் தொலைநோக்குப் பார்வையை வென்றது மட்டுமின்றி பிராண்ட் இந்தியாவை 100 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பெருமையுடன் ஏற்றுமதி செய்து ஆயிரக்கணக்கான இந்தியர்களைப் பணியமர்த்தி வருகிறது.
இந்தியாவில் செய்யப்படும் லாபி விசாரணை வேண்டும்:
இந்திய ஸ்டென்ட்டுகள் மருத்துவ ரீதியாக சரிபார்க்கப்பட்டு 100-க்கும் அதிகமான கடுமையான விதிமுறைகளைக் கொண்ட நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்கா மற்றும் பிற வளர்ந்த நாடுகளில் விற்கப்படாத தயாரிப்புகள், பிரீமியம் இறக்குமதிகள் என்ற போர்வையில் இந்திய நோயாளிகளுக்கு பொருத்த அனுமதிக்கப்பட்டன. மேலும் மருத்துவ ஆய்வுகளின் ஆதரவு இல்லாமல், தரம் மற்றும் இந்திய ஸ்டென்ட்டுகளின் செயல்திறன் குறித்த தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இவற்றை விசாரிக்கப்பட வேண்டும். ரத்து செய்ய எங்களுக்கு வழங்கப்பட்ட இந்த உத்தரவாதம் வரவேற்கத்தக்க நிவாரணம்" என்று AiMeD மேலாண்மை இயக்குநர், INVolution-ன் இணை ஒருங்கிணைப்பாளர் கௌரவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீட்டுத் திட்டம்
இந்தப் பிரச்சினை குஜராத் அரசாங்கத்தின் அறிவிப்புடன் தொடர்புடையது. இது சமீபத்தில் ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் ஸ்டென்ட்டுகளுக்கு வெவ்வேறு விலைகளை அறிமுகப்படுத்தியது. இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கையின்படி, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டென்ட்டுகள் (ஒரு ஸ்டென்டிற்கு ரூ. 25,000 விலையில் இருக்கும் என்றும், இந்திய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டென்ட்டுகள் பாதி அல்லது ரூ. 12,000 க்கும் குறைவான விலையில் இருக்கும் என்றும் ஒரு உத்தரவு வெளிப்படுத்தியுள்ளது.
குஜராத்தில் ஸ்டென்ட் வைக்க ரூ. 429 கோடி அரசு செலவு:
தற்போது, அடைபட்ட இதய தமனிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் அனைத்து மருந்து-எலுட்டிங் ஸ்டென்ட்டுகளும் (DES) ரூ. 35,000 விலையில் உள்ளன. இந்திய மருத்துவ உற்பத்தியாளர்கள் புதிய விலை நிர்ணயக் கொள்கை குறித்து கவலைகளை எழுப்பியதாகவும், இது "பாரபட்சமானது" என்றும், சந்தையில் "நியாயமான போட்டியை உறுதி செய்ய" அரசாங்கத்தை வலியுறுத்தியதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. குஜராத்தில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஸ்டென்ட் பொருத்துதல்கள் 2018-ல் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ரூ. 429 கோடி செலவாகியுள்ளன என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.