lpg gas price: உலகிலேயே இந்தியாவில்தான் எல்பிஜி விலை அதிகமா, பெட்ரோல் 3வது அதிகபட்சமா? ஆய்வறிக்கை சொல்வதென்ன

Published : Apr 09, 2022, 05:59 PM IST
lpg gas price: உலகிலேயே இந்தியாவில்தான் எல்பிஜி விலை அதிகமா, பெட்ரோல் 3வது அதிகபட்சமா? ஆய்வறிக்கை சொல்வதென்ன

சுருக்கம்

lpg gas price :உலகிலேயே இந்தியாவில்தான் எல்பிஜி விலை அதிகபட்சம் என்றும், பெட்ரோல் விலை 3-வது அதிகபட்சம் என்றும், டீசல்விலை 8-வது அதிகபட்சம் என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது

உலகிலேயே இந்தியாவில்தான் எல்பிஜி விலை அதிகபட்சம் என்றும், பெட்ரோல் விலை 3-வது அதிகபட்சம் என்றும், டீசல்விலை 8-வது அதிகபட்சம் என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது

பிபிபி-வாங்கும் சக்தி அடிப்படை

இந்த ஆய்வறிக்கை அனைத்தும் ஒவ்வொரு நாட்டின் கரன்ஸியின் உள்நாட்டில் வாங்கும் சக்தியின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுள்ளது. மாறாக ஏற்றுமதி இறக்குமதி சந்தையில், கரன்ஸி சந்தையில் டாலர் நிகரான மதிப்பின் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்படவில்லை

சர்வதேச நிதியம் ஒவ்வொரு நாட்டின் வாங்கும்சக்திதிறன்(பர்ச்சேங் பவர் பேரிட்டி) அடிப்படையில் அல்லது சர்வதேச அளவில் டாலருக்கான சராசரி மதிப்பிடுகறது. அந்தவகையில் பாரத்தால் டாலருக்கு நிகாரன இந்தியாவின் ரூபாய்  மதிப்பு ரூ.75.84 என்பதல்ல ஐஎம்எப் கணக்கிட்டின்படி வாங்கும்சக்தி அடிப்படையில் ரூ.22.50 மட்டும்தான். 

கரன்ஸி சந்தை

ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.75.85 ஆக இருக்கிறதென்றால், அது கரன்ஸி சந்தையில்மட்டும்தான். ஆனால், ஒவ்வொரு நாட்டின் கரன்ஸின் வாங்கும் சக்தி அடிப்படையில் பார்க்கும்போது அது ரூ.22.50 மட்டுமே. 

வாங்கும்சக்தி அடிப்படையில் கணக்கிடும்போதுதான் ஒவ்வொரு நாட்டின் கரன்ஸியின் திறன் என்ன என்பது தெரியவரும். உதாரணமாக அமெரிக்காவில் கடந்த மார்ச் மாதம் ஒருகிலோ உருளைக்கிழங்கு 1.94 டாலர்.ஆனால் டாலருக்கு இணையாக கரன்ஸி பரிமாற்றத்தில் பார்த்தால் இந்திய மதிப்பில் ரூ.147 வருகிறது. இதை வைத்துக் கணக்கிட்டால் 7 கிலோ உருளைக்கிழங்கை இந்தியாவில் வாங்க முடியும்.

டாலரின் வாங்கு சக்தியை ஒப்பிட்டு பார்த்தால், ஒரு டாலர் விலை அன்னியச்செலாவணியில் இன்று ரூ.75.84. இதற்கு இந்தியாவில் நாம் அதிகம் வாங்க முடியும். ஆனால் ஒரு டாலரில் அமெரிக்காவில் அதிகம் வாங்கி விட முடியாது. 

மதிப்பு அதிகம்

உதாரணமாக மேற்கத்திய நாடுகளில் ஒருவர் சம்பாதிக்கும் தினசரி வருமானத்தில் பெட்ரோலுக்காக அவரின் ஒருநாள் ஊதியத்தில் மிகக்குறைவாகவே செலவிடுகிறார். ஆனால், இந்தியர் ஒருவர் தனதுஒருநாள் ஊதியத்தில் நான்கில் ஒரு பங்கு செலவிடுகிறோம்.

அதாவது அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளில் ஊதியமும் அதிகம், அந்த நாட்டின் கரன்ஸி மதிப்பும் இந்திய ரூபாயோடு ஒப்பிடுகையில்அதிகம். 
அந்த வகையில் சர்வதேச நிதியம் வாங்கும்சக்தி அடிப்படையில் இந்திய ரூபாய்க்கு மதிப்பை கணக்கிட்டால் இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்க நாம் கொடுக்கும் விலை என்பது உலகிலேயே 3-வது அதிகபட்சமாகும்.

 

பெட்ரோல் கணக்கீடு

அதாவு சர்வதேச நிதியத்தின் கணக்கீட்டின்படி ஒருலிட்டர் பெட்ரோல் வாங்குவதற்கு 5.2 டாலர்களை இந்தியர்கள் செலவிடுகிறார்கள். அதாவது ரூ.75.85 என்ற டாலரின் மதிப்பின் எடுக்காமல் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.22.50 எனக் கணக்கிட்டால் 5.20 டாலர்களை இந்தியர்கள் செலவிடுகிறார்கள். 

குளோபல்பெட்ரோல்ப்ரைசஸ்.காம் என்ற தளம் கணக்கிட்டின்படி, 157 நாடுகளின் கரன்ஸியை பட்டியலிட்டதில் இந்தியாதான் 5.2 டாலர்கள் கொடுத்து பெட்ரோல் வாங்கி 3வது இடத்தில் இருக்கிறது. அதிகபட்சமாக சூடான் மக்கள் 8 டாலரும், லாவோஸ் மக்கள் 5.6 டாலர்களும் செலவிடுகின்றனர்.  

அமெரிக்காவில் லிட்டர்களில் பெட்ரோல் விற்கப்படாது, கேலன் என்ற கணக்கில்தான் விற்கப்படும். அமெரிக்காவில் ஒரு கேலன் கேசோலின் என்பது தோராயமாக 3.78 லிட்டர்கள் பெட்ரோல். ஒரு கேலன் விலை 4.31 அமெரிக்க டாலர்கள், அதாவது ரூபாயின் படி ரூ.329 ஆகும். 
அந்த அடிப்படையில் பார்த்தால் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்க 1.2 டாலரும், ஜப்பான் 1.5 டாலரும், ஸ்பெயின் 2.7 டாலரும் செலவிடுகிறார்கள். இது இந்தியர்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கச் செலவிடும் தொகையைவிடக் குறைவாகும்.

எல்பிஜி விலை

எல்பிஜி விலையை 54 நாடுகளின் கரன்ஸியுடன் ஒப்பிட்டுள்ளனர். இதில் இந்தியா ஒரு லிட்டர் எல்பிஜி வாங்குவதற்கு 3.5 டாலர் செலவிடுகிறது. இது உலகிலேயே மிக அதிகபட்சமாகும். துருக்கி, பிஜி, மால்டோவா, உக்ரைன் ஆகிய நாடுகள்தான் அடுத்த 4 இடங்களில் உள்ளனர். 
எல்பிஜி விலையை ஒப்பிடுகையில் ஸ்விட்சர்லாந்து, பிரான்ஸ், கனடா , பிரிட்டன் ஆகிய நாடுகள் ஒரு டாலர்தான் செலவிடுகின்றனர். 


 

டீசல் விலை

டீசல் விலையைப் பொறுத்தவரை 156 நாடுகளின் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் பார்த்தால், இ்ந்தியர்கள் ஒருலிட்டர் டீசல் வாங்க 4.6 டாலர் செலவிடுகிறார்கள். அதிகபட்சமாக சூடான் நாட்டினர் டீசல் ஒரு லிட்டர் வாங்க 7.7 டாலர் செலவிடுகிறார்கள். அதைத் தொடர்ந்து அல்பேனியா, துருக்கி, மியான்மர், ஜார்ஜியா, பூடான், லாவோஸ் நாட்டினர் அதிகமாக செலவிடுகிறார்கள்.

அமெரிக்கர்கள் செலவிடுவது குறைவு

 பெட்ரோல் வாங்குவதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் தனது தினசரி வருமானத்தில் 0.6% மட்டுமே செலவிடுகிறார். ஸ்பெயினைச் சேர்ந்த ஒருவர் தனது தினசரி வருமானத்தில் 22% , இந்தியர்கள் தினசரி வருமானத்தில் 23.5%, பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் 23.8% செலவிடுகிறார்கள். நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் தனது தினசரி வருமானத்தில் 38.2சதவீதத்தையும், புரன்டி நாட்டைச்சேர்ந்தவர் 181.8% செலவிடுகிறார். 
 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!
அனில் அம்பானிக்கு அதிர்ச்சி.! அமலாக்கத்துறை எடுத்த அஸ்திரம்.. இடியாப்ப சிக்கலில் ரிலையன்ஸ் பவர்