Gold Rate Today : ஷாக் நியூஸ்.! ஜெட் வேகத்தில் ஏறும் தங்க விலை.. இப்போதைக்கு தங்கம் வாங்க வேண்டாம் மக்களே !

By Raghupati RFirst Published Apr 9, 2022, 11:16 AM IST
Highlights

Gold Rate Today : ரஷிய மீதான பொருளாதார தடைகள், பெரும்பாலான பொருட்களின் விலையை உயர்த்துவதற்கு வழிவகுக்கும் என்று கணிக்கப்பட்டது போன்றே உலகம் முழுவதும் விலை உயர்வை ஏற்படுத்தி உள்ளது. 

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுக்க தொடங்கியுள்ளது. இதனால், கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன.  இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. தங்கத்தை வாங்குவதில் பெண்களின் ஆர்வம் என்றைக்கும் குறைந்ததில்லை. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன ? என்று பார்க்கலாம். 

இன்றைய தங்க விலை :

இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,883 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, நேற்று 39,056 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 8 ரூபாய் அதிகரித்து 39,064 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இன்றைய வெள்ளி விலை :

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.71.50 ஆக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 71,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

click me!