sri lanka economic crisis: சோதனைக்கு மேல் சோதனையா! இலங்கையில் கடனுக்கான வட்டி வீதம் இரு மடங்காக அதிகரிப்பு

Published : Apr 09, 2022, 11:07 AM IST
sri lanka economic crisis: சோதனைக்கு மேல் சோதனையா! இலங்கையில் கடனுக்கான வட்டி வீதம் இரு மடங்காக அதிகரிப்பு

சுருக்கம்

sri lanka economic crisis : இலங்கையில் கடும் விலைவாசி உயர்வால் உணவுப் பொருட்களை வாங்க வழியில்லாமல்  மக்கள் சிரமத்தில் இருக்கும் நிலையில் கடனுக்கான வட்டிவீதத்தை இரு மடங்காக அந்நாட்டின் மத்திய வங்கி அதிரடியாக உயர்த்தியுள்ளது.

இலங்கையில் கடும் விலைவாசி உயர்வால் உணவுப் பொருட்களை வாங்க வழியில்லாமல் சிரமத்தில் இருக்கும் நிலையில் கடனுக்கான வட்டிவீதத்தை இரு மடங்காக அந்நாட்டின் மத்திய வங்கி அதிரடியாக உயர்த்தியுள்ளது.

இருமடங்கு உயர்வு

இதன்படி இலங்கையில் கடனுக்கான வட்டி வீதம் 700 புள்ளிகள் உயர்த்தப்பட்டு 14.50 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.100க்கு  ஏறக்குறைய15 ரூபாய் வட்டியாகச் செலுத்த வேண்டும். மத்திய வங்கி 14.50 சதவீதம் நிர்ணயித்துள்ளநிலையில் மற்ற வங்கிகள் அதைவிட அதிகமாக நிர்ணயிக்கும்

ஏன் வட்டி அதிகரிப்பு

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கலால் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து, பணவீக்கம் ஆசியாவிலையை மிகவும் அதிகமாக 25 சதவீதாக இருக்கிறது. இந்த பணவீக்கத்தை குறைக்கும் நடவடிக்கையில்தான் மத்திய வங்கி இறங்கி, வட்டி வீதத்தை உயர்த்தியுள்ளது.

இதனால் வங்கிகளில் வீட்டுக்கடன், வாகனக் கடன் பெற்றுள்ள அதிகமாக வட்டி செலுத்த வேண்டியதிருக்கும். வட்டி அதிகரித்துள்ளதையடுத்து, கைவசம் அதிகமாக பணம் வைத்திருப்போர் வட்டிக்கு ஆசைப்பட்டு வங்கியில் டெபாசிட் செய்வார்கள். இதனால் பணப்புழக்கத்தின் அளவு குறைந்து படிப்படியாகவிலைவாசி குறையத் தொடங்கும். இந்த நடவடிக்கைக்கு பலன் கிடைக்க சில மாதங்கள்கூட ஆகலாம்.

மக்கள் போராட்டம்

இலங்கைஅரசிடம் அந்நியச் செலவாணி கையிருப்பு குறைந்ததால், அத்தியாவசியப் பொருட்கள், உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல், மருந்துகள் போன்வற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முடியவில்லை. 

இதனால் உள்நாட்டில் உணவுப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்தது, பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது, மின்உற்பத்தி பாதிக்கப்பட்டு மின்வெட்டு நிலவுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் வீதிக்கு வந்து போராடி வருகிறார்கள். மக்கள் போராட்டத்தைக் கட்டுப்படுத்த அவசரநிலை, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி எச்சரிக்கை

இலங்கை அரசின் அமைச்சரவையும் கலைக்கப்பட்டு,புதிய அமைச்சரவை பதவி ஏற்றாலும் பொருளாதாரச் சிக்கலை தீர்க்க முடியவி்லலை.
இதையடுத்து, இலங்கையில் எதிர்க்கட்சியான சமகி ஜன பாலவேகியா நேற்று விடுத்த அறிக்கையில் இலங்கையில் பொருளாதாரச் சிக்கலைத் தீர்க்க அரசு  தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொள்ள வேண்டும் எனச் எச்சரித்துள்ளார்

பொருளாதார வளர்ச்சி குறையும்

மேலும், ஆயத்த ஆடை தயாரிப்பு, தேயிலை ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் ஏற்றுமதி இந்த ஆண்டு 30 சதவீதம் வரை குறையும் என்று பொருளாதார வல்லுநர்களும், தொழில்நிறுவனத் தலைவர்களும் கணித்துள்ளனர்

இலங்கை மத்திய வங்கி பணவீக்கத்தைக் குறைக்க கடனுக்கான வட்டியை 14.50 சதவீதமாக உயர்த்தியது சிறு,குறு,நடுத்தரத் தொழில்கள், தொழில்நிறுவனங்களைக் கடுமையாகப் பாதிக்கும். அதேநேரம் டெபாசிட்களுக்கான வட்டியும் 13.50  சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!
அனில் அம்பானிக்கு அதிர்ச்சி.! அமலாக்கத்துறை எடுத்த அஸ்திரம்.. இடியாப்ப சிக்கலில் ரிலையன்ஸ் பவர்