
சாலைப் போக்குவரத்து அதிகரித்துவருவதையடுத்து, மக்கள் வாகனங்களில் பாஸ்டேக் பட்டை பொருத்துவதும் அதிகரித்துள்ளது. இதனால் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் பாஸ்டேக் வசூல் ரூ.4ஆயிரம் கோடியைக் கடந்துள்ளது.
பாஸ்டேக் வசூல்
கடந்த மார்ச் மாதத்தில் முதல்முறையாக பாஸ்டேக் வசூல் ரூ.4ஆயிரத்தைக் கடந்து ரூ.4 ஆயிரத்து 95 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு பாஸ்டேக் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து முதல்முறையாக மாத வசூல் ரூ.4ஆயிரம் கோடியைக் கடந்துள்ளது
கடந்த 2021-22ம் நிதியாண்டில் பாஸ்டேக் வசூல், ரூ.38ஆயிரத்து 84 கோடி வசூலாகியுள்ளது. இதில் கடந்த 2021 மார்ச் மாதத்தைவிட 2022,மார்ச் மாதத்தில் மட்டும் வசூல் 33 சதவீதம் அதிகரித்துள்ளது. பிப்ரவர மாதத்தைவிட 17 சதவீதம் அதிகமா மார்ச் மாதத்தில் பாஸ்டேக் வசூல் கிடைத்துள்ளது.மார்ச்சில் மட்டும் 27 கோடிக்கும் அதிகமாக பாஸ்டேக் பரிமாற்றங்கள் நடந்துள்ளன, 5 கோடி பாஸ்டேக் விற்பனையாகியுள்ளன
97% வாகனங்கள்
இதுவரை தேசியநெடுஞ்சாலையில் சுங்கச்சாவடிகளைக் கடந்து செல்லும் வாகனங்களஇல் 97 சதவீதம் வாகனங்கள் பாஸ்டேக் பொருத்திவிட்டன. மீதமுள்ள வாகனங்களுக்கும் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார்.
2022-23ம் நிதியாண்டில் பாஸ்டேக் வரிவசூலை ரூ.35 ஆயிரம் கோடியாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக சாலைப்போக்குவரத்து துறை செயலாளர் கிரிதர் அரமானே தெரிவித்தார். 2025ம் ஆண்டிக்குள் ரூ.ஒரு லட்சம் கோடியாக உயர்த்தப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.