lpg cylinder price : வர்த்தக ரீதியிலான சிலிண்டர் விலை ரூ.250 உயர்வு: விலைவாசி கடுமையாக உயரும்:ATF விலை உயர்வு

Published : Apr 01, 2022, 10:32 AM IST
lpg cylinder price : வர்த்தக ரீதியிலான சிலிண்டர் விலை ரூ.250 உயர்வு:  விலைவாசி கடுமையாக உயரும்:ATF விலை உயர்வு

சுருக்கம்

lpg cylinder price: ஏப்ரல் மாதத்தின் முதல்நாளான இன்று வர்த்தகரீதியிலான சிலிண்டர் விலை ரூ.250 உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. விமானங்களுக்கு பயன்படும் எரிபொருள்விலையும் 2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தின் முதல்நாளான இன்று வர்த்தகரீதியிலான சிலிண்டர் விலை ரூ.250 உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. விமானங்களுக்கு பயன்படும் எரிபொருள்விலையும் 2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

ரூ.250 உயர்வு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலராகக் குறைந்ததையடுத்து, பெட்ரோல், டீசல்விலையில் எந்த மாற்றமும் இல்லை.
மாதத்தின் முதல்தேதி, 15ம் தேதிகளில் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.

அதன்படி ஏப்ரல் 1ம்தேதி, புதியநிதியாண்டு தொடக்கநாளான இன்று, 19கிலோ எடைகொண்ட வர்த்தகரீதியிலான சிலிண்டர் விலை ரூ.250 உயர்ந்து, ரூ.2,253க்கு விற்பனையாகிறது.

வீடுகளில் சமையலுக்கு பயன்படும் 14.2கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.949.50க்கு விற்பனையாகிறது.
வர்த்தக சிலிண்டர் விலை மும்பையில் ரூ.2,205 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.2,351 ஆகவும், சென்னையில் ரூ.2,406க்கும் விற்கப்படுகிறது.

விலைவாசி உயரலாம்

வர்த்தக ரீதியிலான சிலிண்டர் விலை ரூ250 உயர்த்தப்பட்டிருப்பதால்  ஹோட்டல்களிலும் டீ கடைகளிலும் பயன்படுத்தும ்சிலிண்டர் விலை உயரும். இந்த விலை உயர்வை நுகர்வோர் தலையில் ஏற்ற வேண்டிய நிரப்ந்தம் அவர்களுக்கு ஏற்படும். இந்த விலை உயர்வால் தேநீர், காபி, நொறுக்குத்தீனிகள், ஹோட்டல்களில் உணவுகள் விலை உயரும் நிலை இருக்கிறது. 

விலை மாற்றமில்லை
பெட்ரோல், டீசல்விலையில் எந்த மாற்றமும் இன்று செய்யப்படவில்லை. ஆனால், கடந்த 10 நாட்களில் விலை ஏற்றப்பட்டதால், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.6.40 பைசா உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை மாற்றமில்லை லிட்டர் ரூ.107.45 ஆகவும், டீசல் விலை லிட்டர் ரூ.97.52 ஆக இருக்கிறது. 

விமான எரிபொருள் விலை அதிகரிப்பு

விமானங்களுக்குப் பயன்படும் ஏடிஎப் எரிபொருள் விலை ஒரு கிலோலிட்டருக்கு 2 சதவீதம் அதாவது ரூ.2,258 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு கிலோலிட்டர் விமான எரிபொருள் விலை ரூ.ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 924 ஆக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் விமான எரிபொருள்விலை ரூ.38ஆயிரத்து 902 உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்ககது
 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

IndiGo: 10,000 கார்கள், 9,500 ஹோட்டல் அறைகள், ரூ.827 கோடி ரீஃபண்ட்... மீண்டும் மீண்டு வந்த இண்டிகோ!
Economy: இனி பெட்ரோல் மட்டுமல்ல, காய்கறி விலையும் உச்சம் போகும்.! இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் ஏற்படப்போகும் தலைகீழ்மாற்றம்.!