lic ipo listing : எல்ஐசி பங்கு விலை சரிவால் கவலையா? முதலீட்டாளர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும்?

By Pothy RajFirst Published May 17, 2022, 6:18 PM IST
Highlights

lic ipo listing : எல்ஐசி பங்குகள் இன்று பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டதும் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்ததை நினைத்து முதலீட்டாளர்கள் கவலையில் உள்ளனர். அடுத்ததாக முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த செய்தி விளக்குகிறது

எல்ஐசி பங்குகள் இன்று பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டதும் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்ததை நினைத்து முதலீட்டாளர்கள் கவலையில் உள்ளனர். அடுத்ததாக முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த செய்தி விளக்குகிறது

எல்ஐசி ஐபிஓ முடிந்தநிலையில் இன்று பங்குகள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டன. எல்ஐசியின் ஒரு பங்குவிலை ரூ.949 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதைவிடக் குறைவாக 8சதவீதம் குறைத்து பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. அதாவது மும்பைப் பங்குச்சந்தையில் ரூ.81.80 குறைவாக ரூ.872க்கும், தேசியப் பங்குச்சந்தையில் ரூ.77 குறைவாக ரூ.867.20க்கும் பட்டியலிடப்பட்டது.

இன்று பங்குச்சந்தை வர்த்தகம் முடிவில் எல்ஐசி பங்கு விலை ரூ.875.45க்கு முடிந்தது. அதாவது ரூ.73.55 குறைவாக 7.75 சதவீதம் குறைவாக முடிந்தது. என்எஸ்சியில் ரூ.873க்கு முடிந்தது.

எல்ஐசி பங்குகள் முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கு ரூ.949 என்ற விலையில் விற்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று வர்த்தகத்தில் ஒருபங்கு ரூ.875க்கு விற்பனையானதால் முதலீட்டாளர்கள் கையை பிசைந்துகவலையில் ஆழ்ந்தனர்.
முதலீட்டாளர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும்

மத்திய அரசின் முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மைப் பிரிவு செயலாளர் துஹின் கந்தா பாண்டே கூறுகையில் “ கணிக்கமுடியாத சந்தைச் சூழலில் எல்ஐசி பங்கு அறிமுகப்படுத்தப்பட்ட முதல்நாளில் மதிப்பு சரிந்துள்ளது. முதலீட்டாளர்கள் அவசரப்படாமல் நீண்டகாலத்துக்கு பங்குகளை வைத்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

எல்ஐசி நிறுவனத்தின் தலைவர் எம்ஆர் குமார் நிருபர்களிடம் கூறுகையில்  “ எல்ஐசி பங்கு விரைவில் விலை அதிகரிக்கும். ஏராளமான பாலிசிதாரர்கள், சில்லரை முதலீட்டாலர்களுக்கு பங்குகள் ஒதுக்கீடு செய்ய முடியவில்லை. ஆதலால், விரைவில் பங்கு விற்பனை விரைவில் சூடுபிடிக்கும். நீண்டகாலம்வரை இதே நிலை நீடிக்கும் என்று நான் நினைக்கவில்லை” எனத் தெரிவித்தார்

ஆக்சிஸ் செக்யூரிட்டிஸ் சிஇஓ கோபகுமார் கூறுகையில் “ முதலீட்டாளர்கள் தொடக்க நிலையைப் பார்த்து எல்ஐசி பங்குகளை விற்றுவிடக்கூடாது. நடுத்தர மற்றும் நீண்டகால நோக்கில் வைத்திருந்தால் நல்ல லாபம் கிடைக்கும். காப்பீடு துறையில் எல்ஐசிதான் தலைவராக இருந்து வருகிறது, ஆதால், நீண்டகாலத்தில் எல்ஐசி பங்கு சூடுபிடிக்கும்” எனத் தெரிவித்தார்.

பன்ட்ஸ் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ கிரிராஜன் முருகன் கூறுகையில் “ உக்ரைன் ரஷ்யா போரால் சந்தையில் நிலையற்ற சூழல் நிலவுகிறது. அதுமட்டுமல்லாமல் நாட்டில் நிலவும் பணவீக்கப் பிரச்சினை போன்றவற்றால் முதல்நாளில் எல்ஐசி பங்குகள் விலை சரியலாம். ஆனால், நீண்டகாலத்தில் எல்ஐசி பங்கிற்கு நல்ல விலை கிடைக்கும்” எனத் தெரிவித்தார்
 

click me!