
கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள தடையை மறுபரிசீலனை செய்யும் என நம்புவதாகவும், அவ்வாறு தடைவிதித்தால் அது உணவுத்தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
உலகிலேயே அதிகமாக கோதுமை ஏற்றுமதி செய்யும் நாடுகள் ரஷ்யா, உக்ரைன். ஆனால், இரு நாடுகளுக்கு இடையே நடந்து வரும்போரால் கோதுமை ஏற்றுமதி தடைபட்டுள்ளது. இதையடுத்து, உலகிலேயே 3-வது மிகப்பெரிய கோதுமை உற்பத்தி, ஏற்றுமதியாளரான இந்தியாவின் பக்கம் உலக நாடுகள் கவனம் திரும்பியது.
ரஷ்யா உக்ரைன் போருக்குப்பின் இந்தியாவிலிருந்து கோதுமை ஏற்றுமதி அதிகரிக்கத் தொடங்கியது. அதேசமயம், நாட்டில் நிலவும் கடுமையான வெயில், வெப்ப அலை காரணமாக இந்த ஆண்டு கோதுமை விளைச்சல் பாதிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. முதல்கட்ட கணிப்பில் 111 மில்லியன் டன் கோதுமை விளைச்சல் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் அதை 106மில்லியன் டன்னாகக் குறைந்துவிட்டது.
அதுமட்டுமல்லாமல் கோதுமை விலையும், கோதுமையால் செய்யப்படும் உணவுப் பொருட்கள் விலையும் அதிகரிக்கத் தொடங்கியது. கோதுமைக்கான தேவையும் படிப்படியாக அதிகரித்தது. இதை உணர்ந்த மத்திய அரசு உள்நாட்டு தேவையை சரிசெய்யவும், விலையைக் கட்டுப்படுத்தவும் அதிரடியாக நடவடிக்கை எடுத்தது. அதன்படி, கோதுமை ஏற்றுமதிக்கு திடீரென நேற்று தடை விதித்தது.
ஏற்கெனவே ஒப்பந்தம் செய்தவ நிறுவனங்கள் மட்டும் கோதுமை ஏற்றுமதி செய்ய மட்டும் சில விதிவிலக்குகளை மத்திய அரசு அளி்த்திருந்தது.
இந்நிலையில் கோதுமை ஏற்றுமதிக்கு விதித்த தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் க்ரீன் பீல்ட் அளித்த பேட்டியில் கூறுகையில் “ கோதுமை ஏற்றுமதிக்கு தடைவிதித்து இந்திய அ ரசு பிறப்பித்த உத்தரவைக் கவனித்தோம். ஏற்றுமதிக்கு தடை விதிக்காதீர்கள் என்று நாங்கள் நாடுகளை ஊக்கப்படுத்தி வருகிறோம். உணவு ஏற்றுமதிக்கு தடை விதித்தால் அது உணவுத் தட்டுப்பாட்டில் முடியும்
பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்கும் நாடாக இந்தியா இருக்கிறது. மற்ற நாடுகள் எழுப்பும் குறைபாடுகள், கவலைகளை இந்தியா நன்கு அறியும் ஆதலால் கோதுமை ஏற்றுமதிக்கான தடையை இந்திய அரசு மறுபரிசீலனை செய்யும் என நம்புகிறோம்.
வளர்ந்து வரும் நாடுகளுக்கு உணவுவழங்கும் நாடாக உக்ரைன் இருந்தது. ஆனால், ரஷ்யாவின் தாக்குதலால் துறைமுகங்கள், கட்டுமானங்கள் அழிக்கப்பட்டன. ஆப்பிரி்க்கா, மத்திய கிழக்கு நாடுகளில் பட்டினி சூழல் நிலவுகிறது. இது உலக நாடுகளுக்கான பிரச்சினை, ஆதலால் ஐ.நா.வைச் சேர்ந்தது.அடுத்த வேளை உணவுக்காக காத்திருக்கும் மக்களுக்காகவும், குடும்பத்துக்கு எவ்வாறு உணவு வழங்கப்போகிறோம் என்று கவலைப்படும் மக்களுக்காகவும் நாம் உழைக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.
இவ்வாறு லிண்டா தாமஸ் தெரிவித்தார்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.