
எல்ஐசி ஐபிஓ இன்று முடிகிறது என்பதால், கடைசி நாளில் அதிகளவில் விண்ணப்பம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 1.79 மடங்கு விருப்பம் தெரிவித்து விண்ணப்பங்கள் வந்துள்ளன.
அமோக வரவேற்பு
பாலிசிதாரர்கள் தரப்பில் 5 மடங்கு விருப்ப விண்ணப்பங்களும், ஊழியர்கள் தரப்பில் 3.8 மடங்கும், சில்லரை முதலீட்டாளர்கள் தரப்பில் 1.6 மடங்கும் விண்ணப்பங்கள் வந்துள்ளன. நிறுவன முதலீட்டாளர்கள், கோடிஸ்வர முதலீட்டாளர்கள் தரப்பில் 1.24 மடங்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன.
ஆங்கர் முதலீட்டாளர்கள்
எல்ஐசி பங்கு விற்பனை கடந்த 2-ம் தேதி ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு நடந்தது. அதன்பின் 4ம் தேதி முதல் வரும் 9ம் தேதிவரை பொது முதலீட்டாளர்களுக்கு பங்கு விற்பனை நடந்து வருகிறது. ஒட்டுமொத்தமாக 16.27 கோடி பங்குகளுக்கு 5-ம் நாளான நேற்றுவரை 29.08 கோடி விண்ணப்பங்கள் அதாவது 1.79 மடங்கு விண்ணப்பம் வந்துள்ளன. முதலீட்டாளர்கள் தரப்பிலிருந்து நேற்றுவரை 1.60 மடங்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன.
பொது முதலீட்டாளர்களுக்கான பங்கு விற்பனையில் எல்ஐசி ஊழியர்களுக்கு ஒரு பங்கிற்கு ரூ.45 தள்ளுபடியும், பாலிசிதாரர்களுக்கு ரூ.60 தள்ளுபடியும் தரப்படுகிறது. எல்ஐசி பங்கு ஒன்றின் விலை ரூ.902 முதல் ரூ.949 வரை விற்கப்படுகிறது.
கடந்த 2ம் தேதி ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு நடந்த பங்கு விற்பனையில் ரூ.5,267 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டது. இதில் 71 சதவீத முதலீடு உள்நாட்டு பரஸ்பர நிதி நிறுவனங்கள் மூலம் வந்துள்ளன. 123 முதலீட்டாளர்கள் 5.93 கோடி பங்குகளை வாங்கியுள்ளனர். ஒரு பங்கு ரூ.949க்கு விற்கப்பட்டுள்ளது. இதில் 4.21 கோடி பங்குகள் மட்டும் 15 உள்நாட்டு பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு 99 திட்டங்களின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில் பாலிசிதாரர்கள் மட்டும் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட 5 மடங்கு பங்குகளை வாங்க விண்ணப்பித்துள்ளனர். ஊழியர்கள் 3.8 மடங்கு அளவும், சில்லரை முதலீட்டாளர்கள் 1.6 மடங்கும் விண்ணப்பம் செய்துள்ளனர்.
5-வது நாள்
ஒட்டுமொத்தமாக 16.20 கோடி பங்குகளுக்கு இதுவரை 29.08 கோடி விண்ணப்பங்கள் வந்துள்ள என செபியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன
தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கான ஒதுக்கீ்ட்டில் இன்னும் பங்குகள் முழுமையாக விற்க விருப்பம் கோரப்படவில்லை. இந்தத் தரப்பில் பெரும்பாலும் வரவேற்பு இல்லை.
நிறுவனங்கள் அல்லாத முதலீட்டாளர்கள் (என்ஐஐ) தரப்பில் 2.96 கோடி பங்குகளுக்கு இதுவரை 3.67 கோடி விருப்ப மனுக்கள் வந்துள்ளன. ஏறக்குறைய 1.24 மடங்கு அதிகமாக விண்ணப்பங்கள் வந்துள்ளன
5 மடங்கு
சில்லரை நிறுவன முதலீட்டாளர்கள் தரப்பில் 6.90 கோடி பங்குகளுக்கு 10.99 கோடி விண்ணங்கள் , அதாவது 1.59 மடங்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன. பாலிசிதாரர்கள் தரப்பில் 5.04 மடங்கும், எல்ஐசி ஊழியர்கள் தரப்பில் 3.79 மடங்கும் விருப்ப மனுக்கள் வந்துள்ளன. எல்ஐசி ஐபிஓ விற்பனை இன்றுடன் முடிவதால், இன்னும் விருப்பமனுக்கள் அதிகளவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.