
அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியாவில் 3 கோடி பேட்டரி வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கும் என்று நம்புகிறேன் என்று மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரில் நேற்று ஸ்டார்ட்அப் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் தொடர்பான செயல்விளக்கக் காட்சியை பார்வையிட்டார். இகேஏ இ-9 நிறுவனம் சார்பில் முதன் முதலில் மேக் இன் இந்தியா திட்டத்தில் தயாரிக்கப்பட்ட பேட்டரியில் இயங்கக்கூடிய பேருந்தையும் நிதின் கட்கரி பார்வையி்ட்டார்.
மேக் இன் இந்தியா திட்டத்தில் தயாரிக்கப்பட்ட பேருந்தையும், அதற்கு முயற்சி எடுத்த நிறுவனத்தையும், அதன் உரிமையாளர் டாக்டர் சுதிர் மேத்தாவையும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மிகவும் பாராட்டினார். பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்ட இந்த பேட்டரி பேருந்து, 200கிலோவாட் திறன் கொண்டது. அதிகபட்சமாக 31 பேர் பயணிக்க முடியும்
இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில் “ நாட்டில் ஆட்டமொபைல் துறையின் அளவு ரூ.7.50 லட்சம் கோடியாகும். இதில் 3.50 லட்சம் கோடி வாகனங்கள் ஏற்றுமதியாகின்றன. இதை அடுத்த 5 ஆண்டுகளில் 15 லட்சம் கோடியாக மாற்ற விரும்புகிறோம். உலகின் மிகவும் பிரபலமான நிறுவனங்கள் இந்தியாவில் கார் தொழிற்சாலை அமைத்துள்ளன.
இந்தியாவில் கார்களை தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.இந்த ஆட்டோமொபைல் துறையி்ல் 4 கோடி வேலைவாய்ப்புகளை வழங்குகிறது.அடுத்த 5 ஆண்டுகளில் 5 கோடி வேலைவாய்ப்புகளை வழங்கும். அதிகமான வேலைவாய்ப்புகளை வழங்கும் துறையாக ஆட்டமொபைல் துறை இருக்கிறது.
இந்தியாவில் ஏராளமான இளைஞர்கள் மிகுந்த திறனுடனும், புத்தாக்க சிந்தனையுடனும் இருக்கிறார்கள். எலெக்ட்ரிக்ஸ்கூட்டர் தயாரிப்பில் தற்போது 250 நிறுவனங்கள் உள்ளன. இந்த 250 ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் தயாரிக்கும் வாகனங்கள் நன்றாக இருப்பதால் ஆர்வமாக மக்களால் வாங்கப்படுகிறது
தற்போது 12 லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் நாட்டில் ஓடுகின்றன. இந்த ஆண்டு இறுதியில் இது 40 லட்சமாகஅதிகரிக்கும். அடுத்த 2 ஆண்டுகளில் 3 கோடியாக அதிகரிக்கும். மிகப்பெரிய நிறுவனங்கள் பேட்டரிகார் தயாரிப்பில் ஈடுபட்டு, சிறிய நிறுவனங்களுக்குப்போட்டியாக தரமான பொருட்களைத் தயாரிப்பது மகிழ்ச்சியளிக்கிறது
இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்தார்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.