FPI: தொடர்ந்து 7-வது மாதம்: மே மாதத்தில் ரூ.6ஆயிரம் கோடி: அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேறுவது அதிகரிப்பு

Published : May 07, 2022, 04:47 PM IST
FPI: தொடர்ந்து 7-வது மாதம்: மே மாதத்தில் ரூ.6ஆயிரம் கோடி: அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேறுவது அதிகரிப்பு

சுருக்கம்

FPI :இந்தியப் பங்குச்சந்தையிலிருந்து பங்குகளை விற்று அந்நிய முதலீட்டாளர்கள் முதலீ்ட்டை எடுத்துச் செல்வது தொடர்ந்துஅதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ17ஆயிரத்து 144 கோடி முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர்

இந்தியப் பங்குச்சந்தையிலிருந்து பங்குகளை விற்று அந்நிய முதலீட்டாளர்கள் முதலீ்ட்டை எடுத்துச் செல்வது தொடர்ந்துஅதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ17ஆயிரத்து 144 கோடி முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர்

மே மாதத்திலும் அந்நிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீட்டை திரும்பப் பெற்று வருகிறார்கள். மே மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும் ரூ.6 ஆயிரம் கோடிக்கும் அதிகமான முதலீட்டை அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்றுள்ளனர்.

அமெரி்க்காவில் வரலாறு காணாத வகையில் பணவீக்கம் உயர்ந்திருப்பதால், அதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பெடரல் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தி வருகிறது. கடந்த இருமுறை மட்டும் பெடரல் வங்கி 75 புள்ளிகளை உயர்த்தியுள்ளது. இதனால், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச்சந்தையிலிருந்து முதலீட்டை எடுத்து அங்கு கொண்டு செல்கிறார்கள். இதனால் இந்தியப் பங்குச்சந்தையிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேறுவது அதிகரித்து வருகிறது

ஏற்கெனவே ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் காரணமாக நிலையற்ற சூழல் உருவானதால், இந்தியப் பங்குச்சந்தையிலிருந்து முதலீட்டை அந்நிய முதலீட்டாளர்கள் எடுப்பது அதிகரி்த்தது.  இப்போது அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டிவீத உயர்வால் முதலீட்டை திரும்பப் பெறுவது அதிகரித்துவருகிறது

அதுமட்டுமல்லாமல் அதிகரித்துவரும் கச்சா எண்ணெய்விலை உயர்வு, உலக நாடுகள் வட்டிவீதத்தை உயர்த்துவது, பணவீக்கம் அதிகரிப்பு போன்ற காரணங்களாலும் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப்பெறுகிறார்கள்2022ம் ஆண்டு மார்ச் மாதம் வரை அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச்சந்தையிலிருந்து ரூ.1.65லட்சம் கோடி முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர். 

ஜியோஜித்நிதிச்சேவையின் தலைமை முதலீட்டு ஆலோசகர் விஜயகுமார் கூறுகையில்  “ மே மாதத்திலும் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்று வருகிறார்கள். மே மாதத்தில் மட்டும் ரூ.6,723 கோடிக்கு பங்குகளை விற்றுள்ளனர். சர்வதேச சந்தை பலவீனமடைந்தாலும் இது தொடரும். நிப்டி 5 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்தால், மீண்டும் அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவார்கள்” எனத் தெரிவித்தார்

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஆதார் அட்டைக்கு புதிய பாதுகாப்பு: இனி நகல் தேவையில்லை!
நெட்வொர்க் இல்லையா.? நோ கவலை.. ஆப் இல்லாமல் இப்போ ஈசியா பணம் அனுப்பலாம்