
எல்ஐசி ஐபிஓ விற்பனையில் நிர்ணயிக்கப்பட்ட பங்குகளைவிட வாங்குவதற்கு 2 மடங்கு விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ள நிலையில், அந்நிய முதலீட்டாளர்கள் தரப்பில் பங்குகளில் முதலீடு செய்யஆர்வம் காட்டவில்லை.
எல்ஐசி பங்கு விற்பனை கடந்த 2-ம் தேதி ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு நடந்தது. அதன்பின் 4ம் தேதி முதல் (இன்று) 9ம் தேதிவரை பொது முதலீட்டாளர்களுக்கு பங்கு விற்பனை நடக்கிறது.
ஒட்டுமொத்தமாக 16.27 கோடி பங்குகளுக்கு 5-ம் நாளான நேற்றுவரை 29.08 கோடி விண்ணப்பங்கள் அதாவது 1.79 மடங்கு விண்ணப்பம் வந்துள்ளன. சில்லரை முதலீட்டாளர்கள் தரப்பிலிருந்து நேற்றுவரை 1.60 மடங்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன.
பொது முதலீட்டாளர்களுக்கான பங்கு விற்பனையில் எல்ஐசி ஊழியர்களுக்கு ஒரு பங்கிற்கு ரூ.45 தள்ளுபடியும், பாலிசிதாரர்களுக்கு ரூ.60 தள்ளுபடியும் தரப்படுகிறது. எல்ஐசி பங்கு ஒன்றின் விலை ரூ.902 முதல் ரூ.949 வரை விற்கப்படுகிறது.இதில் பாலிசிதாரர்கள் மட்டும் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட 5 மடங்கு பங்குகளை வாங்க விண்ணப்பித்துள்ளனர். ஊழியர்கள் 3.8 மடங்கு அளவும், சில்லரை முதலீட்டாளர்கள் 1.6 மடங்கும் விண்ணப்பம் செய்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக 16.20 கோடி பங்குகளுக்கு இதுவரை 29.08 கோடி விண்ணப்பங்கள் வந்துள்ள என செபியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன
கோடி விண்ணங்கள் , அதாவது 1.59 மடங்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன. பாலிசிதாரர்கள் தரப்பில் 5.04 மடங்கும், எல்ஐசி ஊழியர்கள் தரப்பில் 3.79 மடங்கும் விருப்ப மனுக்கள் வந்துள்ளன. எல்ஐசி ஐபிஓ விற்பனை இன்றுடன் முடிவதால், இன்னும் விருப்பமனுக்கள் அதிகளவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்ஐசி பங்கு விற்பனையில் பெரும்பாலும் உள்நாட்டு முதலீட்டாளர்களே வாங்குவதற்கு அதிகமான ஆர்வம் செலுத்தியுள்ளது. அந்நிய முதலீட்டாளர்களகு்கு 2 சதவீதம் ஒதுக்கப்பட்ட நிலையிலும் அதைக்கூட வாங்குவதற்கு ஆர்வம் செலுத்தவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
இதற்கு 3 முக்கியக் காரணங்கள் கூறப்படுகிறது
அமெரி்க்க பெடரல் வங்கி வட்டி உயர்வு
அமெரிக்காவில் வரலாறு காணாத வகையில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த அந்நாட்டு தலைமை வங்கியான பெடரல் ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை உயர்த்தி வருகிறது. ஏற்கெனவே 25 புள்ளிகள் உயர்த்திய நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் 50 புள்ளிகள் உயர்த்தியது. இதனால், எல்ஐசி ஐபிஓவில் பங்கேற்கும் ஆர்வத்தில் இருந்த அந்நிய முதலீட்டாளர்கள் வட்டிவீத உயர்வால் முதலீட்டை அமெரிக்காவிலேயே நிறுத்திக்கொண்டனர்.
கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து இந்தியப் பங்குச்சந்தையிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேறுவது அதிகரித்து வருகிறது. இதுவரை ரூ.1.65 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடு நாட்டைவிட்டு வெளியேறியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டுக்குப்பின் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் முதலீடு குறைந்துள்ளது
அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் சரிவு
அமெரிக்க டாலருக்கு எதிராக இந்தியா ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதும் அந்நிய முதலீட்டாளர்கள் எல்ஐசி ஐபிஓவில்பங்கேற்க ஆர்வத்தை குறைத்துவிட்டது. குறிப்பாக இன்று காலை டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு ரூ.77.42 பைசாவாக வரலாறு காணாதவகையில் வீழ்ச்சி அடைந்தது.
சர்வதேச சந்தை நிலவரம்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது உலகளவிலான சந்தையை ஆட்டம் காண வைத்துள்ளது.ஏற்கெனவே ரஷ்யா உக்ரைன் போர் காரணமாகத்தான் ஐபிஓ விற்பனையை மத்திய அரசு ஒத்திவைத்திருந்தது. இப்போது மீண்டும் போர் தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் 5 சதவீத பங்குகளை விற்க மத்திய அரசு திட்டமிட்டு அதை 3.5சதவீதமாகவும் குறைத்தது. இந்த போர் நிலவரத்தால் அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய தயங்கியதால் எல்ஐசி ஐபிஓவில் ஆர்வம் காட்டவில்லை
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.