2022ம் ஆண்டுக்கான 3ம் கட்ட தங்கப்பத்திரங்களை வரும் 19ம் தேதி முதல் 23ம் தேதிவரை ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது.
2022ம் ஆண்டுக்கான 3ம் கட்ட தங்கப்பத்திரங்களை ரிசர்வ் வங்கி வரும் 19ம் தேதி முதல் 23ம் தேதிவரை வெளியிடுகிறது.
2022-23ம் நிதியாண்டுக்கான தங்கப்பத்திரம் சேமிப்புத் திட்டத்தை மத்திய அரசு ஜூன் மாதம் அறிமுகம் செய்து இதுவரை 2 கட்ட தங்கப்பத்திர விற்பனை முடிந்துள்ளது. இந்நிலையில் 3வது கட்டம் குறித்து நிதிஅமைச்சகம் அறிவித்துள்ளது.
இதன்படி 3வது கட்ட தங்கப்பத்திரங்கள் விற்பனை டிசம்பர் 19ம் தேதி தொடங்கி 23ம் தேதிவரை நடக்கிறது. 4வது கட்ட தங்கப்பத்திரங்கள் விற்பனை 2023ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடக்கிறது என்று நிதிஅமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊசலாட்டத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.120 குறைந்தும் ஆறுதல் இல்லை: நிலவரம் என்ன?
மத்திய அரசு சார்பில் இந்த தங்கப்பத்திரங்களை ரிசர்வ் வங்கி வெளியிடும்.
எங்கு வாங்குவது
இந்த தங்கப்பத்திரங்களை பட்டியலிடப்பட்ட வர்த்தக வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷ்ன் ஆப் இந்தியா லிமிடட்(எஸ்ஹெச்சிஐஎல்), கிளையரிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடட்(சிசிஐஎல்) ஆகியவற்றிலும் குறிப்பிட்ட அஞ்சலகங்கள், பங்குவர்த்தக அலுவகங்களான என்எஸ்இ, பிஎஸ்இ ஆகிவற்றிலும் விற்பனை செய்யப்படும்.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் கச்சா எண்ணெய், டீசலுக்கு வரி குறைப்பு
எத்தனை ஆண்டுகள்
தங்கப் பத்திரங்களின் முதலீட்டுகாலம் 8 ஆண்டுகளாகும் , முதலீடு செய்பவருக்கு ஆண்டுக்கு 2.5 சதவீதம் இருமுறை வட்டித்தொகை கிடைக்கும். 8 ஆண்டுகளுக்குப்பின் அன்றைய தங்கத்தின் விலைக்கு நிகாரக பணம்கிடைக்கும்.
முதலீட்டு ஆதாய வரி ஏதும் விதிக்கப்படாது. தங்க நகைகளுக்கு விதிக்கப்படுவது போன்று செய்கூலி , சேதாரம் கிடையாது. ஆனால் சுத்ததங்கத்தின் மதப்பில்தான் இருக்கும். குறிப்பாக ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படாது. தங்கத்தை பொருளாக வைக்காமல் டிஜிட்டல் முறையில் வைப்பதால், பாதுகாப்பது எளிதானது.
எவ்வளவு வாங்கலாம்
தனிநபர் ஒருவர் ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக 4 கிலோ வரை அதன்மதிப்பில் தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். இந்துக் கூட்டுக்குடும்பத்தில் இருப்போர் 4 கிலோ மற்றும் அறக்கட்டளை மற்றும் சிறுநிறுவனங்கள் 20கிலோ வரை முதலீடு செய்ய முடியும்.
பத்திரங்களை அடமானம் வைக்கலாமா
நிச்சயமாக. இந்த தங்கப்பத்திரங்கள் நாம் முதலீடு செய்திருந்தால், அவரத் தேவைக்கு வங்கிகளில் அடமானம் வைத்து கடன் பெற முடியும். தங்கப்பத்திரங்கள் மதிப்பு அனைத்தும் 999 சதவீதம் சுத்த தங்கத்தின் மதிப்பில் கணக்கிடப்படும்
ஐஆர்சிடிசி பங்குகளை விற்கிறது மத்திய அரசு: விலை தெரியுமா? 5 சதவீதம் பங்கு திடீர் வீழ்ச்சி
பணம் செலுத்துவது எப்படி
தங்கப்பத்திரங்கள் வாங்க விரும்புவோர் அதிகபட்சமாக ரூ.20ஆயிரம் வரை ரொக்கமாகச் செலுத்தலாம். அதற்கு அதிகமான தொகையாக இருந்தால், காசோலை அல்லது மின்னணு பேமெண்ட் மூலம் செலுத்த வேண்டும்.
எப்படி வாங்கலாம்
இந்த தங்கப்பத்திரத்தை வாங்க விருப்பம் உள்ளவர்கள், பான்கார்டு, ஆதார் கார்டு, வங்கி கணக்குப்புத்தகம், அடையாள அட்டை இதில்ஏதாவது ஒன்று இருக்க வேண்டும். இதில் ஏதாவதுஒன்றின் நகலை எடுத்து, தபால் நிலையத்தில் வழங்கப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தங்கப்பத்திரத்தை வாங்கிக்கொள்ளலாம். தங்கப்பத்திரங்களை ஆன்லைன் மூலம் வாங்குவோருக்கு கிராமுக்கு ரூ.50தள்ளுபடியும் தரப்படுகிற