தங்கம் விலை மீண்டும் ஊசலாட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இன்று தங்கம் விலை குறைந்தபோதிலும், சவரன் ரூ.40ஆயிரத்துக்கு கீழ் வராதது நடுத்தரக் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்காத செய்தியாகும்.
தங்கம் விலை மீண்டும் ஊசலாட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இன்று தங்கம் விலை குறைந்தபோதிலும், சவரன் ரூ.40ஆயிரத்துக்கு கீழ் வராதது நடுத்தரக் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்காத செய்தியாகும்.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாயும், சவரனுக்கு 120 ரூபாயும் விலை குறைந்துள்ளது. தங்கம் விலை நேற்று ஒரேநாளில் ரூ.480 அதிகரித்த நிலையில் இன்று ரூ.120 குறைந்துள்ளது.
: ஒரேநாளில் தங்கம் விலை கிடுகிடு உயர்வு! சவரன் ரூ.41ஆயிரத்தை நெருங்குகிறது! நிலவரம் என்ன?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, கிராம் ரூ.5,060ஆகவும், சவரன், ரூ.40,480ஆகவும் இருந்தது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(வெள்ளிக்கிழமை) கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ரூ.5,045 ஆகவும், சவரனுக்கு 120 ரூபாய் சரிந்து ரூ.40 ஆயிரத்து 360ஆக அதிகரித்துள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,045க்கு விற்கப்படுகிறது.
தங்கத்தின் விலை கடந்த 3நாட்களாக குறைந்து வந்தநிலையில் நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது. இன்று மீண்டும் சரிவை நோக்கி தங்கம் விலை நகர்ந்து ஊசலாட்டமான போக்கில் உள்ளது. தங்கம் விலை கடந்த 5 நாட்களில் 4 நாட்கள் விலை குறைந்தபோதிலும், இன்னும் சவரன் ரூ.40ஆயிரத்துக்கு கீழ் குறையாதது, நகைப்பிரியர்களுக்கும், நடுத்தரக் குடும்பத்தினர், நகைவாங்க நினைப்போருக்கு தயக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை மளமளவென சரிந்தது ! மிடில் கிளாஸ் மக்களுக்கு ஹேப்பி! இன்றைய நிலவரம் என்ன?
அமெரிக்காவில் பெடரல் வங்கி வட்டிவீதத்தை 50 புள்ளிகள் உயர்த்தியுள்ளது, இங்கிலாந்து வங்கி, ஐரோப்பியயூனியன் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தியது போன்றவற்றால், முதலீட்டாளர்கள் நோக்கம், தங்கத்தைவிடுத்து, பங்குப்பத்திரங்கள் மீது திரும்பியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை உருவாகும் என்று கணிப்புகள் முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை அளித்துள்ளன.
இந்தக் காரணங்களால் தங்கத்தின் விலை ஊசலாட்டமான போக்கில் உள்ளது, முதலீட்டாளர்கள் துணிச்சலுடன் தங்கத்தில் முதலீடு செய்யத் தயங்குவதே விலை ஏற்ற, இறக்கத்துடன் இருக்க காரணமாகும்.
தங்கம் விலை கொஞ்சூண்டு குறைவு ! இதெல்லாம் போதாது! இன்றைய நிலவரம் என்ன?
வெள்ளி விலையில் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 20 பைசா குறைந்து, ரூ.72.50 ஆகவும், கிலோவுக்கு ரூ.200 குறைந்து, ரூ.72,500 ஆக ஏற்றம் கண்டுள்ளது