லிஸ்ட் பயங்கரமா இருக்கே! மோடி Garage-ஐ அலங்கரிக்கும் சூப்பர் கார் மாடல்கள்

Nandhini Subramanian   | Asianet News
Published : Feb 17, 2022, 02:14 PM IST
லிஸ்ட் பயங்கரமா இருக்கே! மோடி Garage-ஐ அலங்கரிக்கும் சூப்பர் கார் மாடல்கள்

சுருக்கம்

லலித் மோடி பயன்படுத்தி வரும் ஆடம்பர கார் மாடல்கள் பட்டியல் இணையத்தில் வெளியாகி உள்ளது. 

உலகளவில் கிரிகெட் பிரியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஐ.பி.எல். எனப்படும் இந்திய பிரீமியர் லீக் கிரிகெட் தொடரின் நிறுவனராக லலித் மோடி இருக்கிறார். இவர் காட்ஃபிரெ பிலிப்ஸ் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ஆவார். தற்போது இவர் லண்டனில் மிகவும் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இவரிடம் ஏராளமான சூப்பர் கார் மாடல்கள் உள்ளன. அந்த வகையில் இவர் பயன்படுத்தும்  சூப்பர் கார்களின்  பட்டியை தொடர்ந்து பார்ப்போம்.

ஃபெராரி 488 பிஸ்டா ஸ்பைடர் (Ferrari 488 Pista Spider) 

அதிக செயல்திறன் வழங்கும் ஃபெராரி 488 ஸ்போர்ட்ஸ் கார் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த மாடல் புளூ TDF பெயிண்ட் செய்யப்பட்டு அர்ஜெண்டோ லிவெரி கொண்டிருக்கிறது. இதன் நம்பர் பிளேட்டில் “MOD IR” என வருகிறது. இந்த காரை லலித் மோடி டிசம்பர் 2020 வாக்கில் வாங்கினார். 

இந்த காரில் 3 லிட்டர் வி8 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது சாலை போக்குவரத்துக்கான கார்களில் வழங்கப்பட்டு இருக்கும் சக்திவாய்ந்த வி8 என்ஜின் ஆகும். இந்த என்ஜின் 720 பி.எஸ். பவர், 770 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு அதிகபட்சமாக 340  கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. 

பெண்ட்லி மஸ்லேன் ஸ்பீடு (Bentley Mulsanne Speed)

பெண்ட்லி நிறுவனம் மஸ்லேன் மாடல் விற்பனையை நிறுத்தவிட்டது. எனினும், இந்த மாடலில் 6.75 லிட்டர் வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 530 ஹெச்.பி. திறன், 1200 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.8 நொடிகளில் எட்டிவிடும். 

மெக்லாரென் 720S (McLaren 720S)

இந்த புகைப்படத்தை லலித் மோடி தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் பகிர்ந்தார். இந்த மாடல் அவரது மகனுக்காக வாங்கப்பட்டது என அவர் தெரிவித்தார். இந்த மாடலில் 4 லிட்டர் டுவின் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 720 பி.எஸ். பவர், 770 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும். இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 2.8 நொடிகளில் எட்டிவிடும்.

பி.எம்.டபிள்யூ. 7 சீரிஸ் (BMW 7 Series)

இந்தியாவில் லலித் மோடி பயன்படுத்த வந்த மாடல் பி.எம்.டபிள்யூ. 7 சீரிஸ் ஆகும். இது டாப் எண்ட் 760 Li வேரியண்ட் ஆகும். இந்த மாடலில் வி12 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 540 பி.ஹெச்.பி. திறன், 760 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் விலை அறிமுகமான சமயத்தில் ரூ. 1.95 கோடி, எக்ஸ்-ஷோரூம் ஆகும். 

ஃபெராரி F12 பெர்லினெட்டா (Ferrari F12 Berlinetta)

ஃபெராரி F12 பெர்லினெட்டா மாடலை லலித் மோடியின் 50-வது பிறந்த நாளுக்கு அவரது மகன் பரிசாக வழங்கினார். இதன் நம்பர் பிளேட் CRI3KET என கொண்டிருக்கிறது. இந்த மாடல்  இந்தியாவில் விற்பனை செய்யப்படவில்லை. எனினும், இங்கு இந்த காரின் விலை ரூ. 4.72 கோடி, எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த காரில் வி12 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

தங்க கடனில் புதிய விதிகள்.. ஆர்பிஐயின் அதிரடி மாற்றம்.. மக்களே நோட் பண்ணுங்க
அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!