ஓலா நிதிச்சேவை நிறுவனம் கேஒய்சி விதமுறைகளைப் பின்பற்றாததையடுத்து, அந்நிறுவனத்துக்கு ரூ1.67 கோடி அபராதம் விதித்து, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
ஓலா நிதிச்சேவை நிறுவனம் கேஒய்சி விதமுறைகளைப் பின்பற்றாததையடுத்து, அந்நிறுவனத்துக்கு ரூ1.67 கோடி அபராதம் விதித்து, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் “ ஓலா நிதிச்சேவை பிரைவேட் லிமிட், கேஒய்சி விதிமுறைகளைப் பின்பற்றி நடக்கவில்லை. அந்த நிறுவனம் பிபிஐ செயல்முறையை பயன்படுத்திய விதத்திலும் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை.
இது தொடர்பாக ஏற்கெனவே எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியபோதிலும் அதற்கும் ஓலா நிறுவனத்திடம் அளித்த பதிலும் திருப்திகரமாக இல்லை.
2016, பிப்ரவரி 25ம் தேதி வெளியிடப்பட்ட கேஒய்சி விதிமுறைகளையும் பின்பற்றாதது, 2021, பிபிஐ விதிமுறைகளையும் பின்பற்றாதது ஆகிய காரணங்களுக்காக, ஓலா நிதிச்சேவை நிறுவனத்துக்கு ரூ.ஒரு கோடியே 67 லட்சத்து 80ஆயிரம் அபராதம் விதிக்கிறோம்.
இந்த அபராதம் என்பது ஓலா நிறுவனம் கேஒய்சி விதிகளை முறையாகக் கடைபிடிக்கவில்லை என்பதற்காகவே விதிக்கப்படுகிறது. மற்றவகையில் வாடிக்கையாளர்களுடன் பரிமாற்ற விவரங்கள் குறித்த விவரங்களை வெளியிட விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளது.
ஓலா நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ப்ரீபெய்ட் வாலட்களை வழங்குகிறது. இந்த வாலட்களை வழங்கரிசர்வ் வங்கியும் அனுமதி வழங்கியுள்ளது. இந்த ப்ரீபெய்ட் வாலட்களில் அதிகபட்சம் ரூ.10 ஆயிரம்வரை வைத்திருக்க முடியும். ஆனால் மாதந்தோறும் ரூ.10ஆயிரம் டெபாசிட் செய்ய முழுமையான கேஒய்சி விவரங்கள் தேவையில்லை.
அதுமட்டுமல்லாமல் நிதியாண்டுக்கு ஒரு வாலட்டில் ரூஒரு லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்யவும் அனுமதியில்லை. அவ்வாறு டெபாசிட் செய்தால் வாடிக்கையாளர் பெயர், முகவரி, பான் எண்,உள்ளிட்ட விவரங்களை வழங்க வேண்டும். ஆனால், இந்த விதிகளை ஓலா நிறுவனம் பின்பற்றவில்லை.இதையடுத்து, ஓலா நிறுவனத்துக்கு ரூ.1.67 கோடி அபராதம் விதித்துள்ளது ரிசர்வ் வங்கி.