
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின்(HCL Technologies) பங்கு மதிப்பு கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவு இன்று வர்த்தக நேரத்தில் சரிந்து, ஒரு பங்கு மதிப்பு ரூ.905.20 ஆகக் குறைந்தது.
ஹெச்சிஎல் நிறுவனம்(HCL Technologies) நடப்பு நிதியாண்டுக்கான முதல் காலாண்டு முடிவை நேற்று அறிவித்தது. அதில் எதிர்பார்த்த அளவு நிகர லாபம் உயாராததையடுத்து, இன்று ஹெச்சிஎல் பங்கு விலை குறைந்து வருகிறது.
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் தனது முதலாவது காலாண்டு முடிவை நேற்று வெளியிட்டது. அதில் நிகர லாபம் 2.11 சதவீதம் அதிகரித்து, ரூ.3,281 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.3,213 கோடியாக இருந்தது. 2022 மார்ச் மாதத்தோடு முடிந்த காலாண்டில் லாபம் 8.83 சதவீதம் குறைந்து, 3,599 கோடியாக மட்டுமே இருந்தது.
ஹெச்சிஎல் டென்னாலஜிஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருமானம் கடந்த முதல் காலாண்டில் 16.92 சதவீதம் உயர்ந்து, ரூ23,464 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.20,068 கோடியாக இருந்தது. வருவாய் அடிப்படையில், கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டைவிட, 3.83 சதவீதம் வருவாய் அதிகரித்து, ரூ.22,597 கோடியாக இருந்தது.
முதல் காலாண்டில் எதிர்பார்த்த லாபத்தை ஹெச்சிஎல் டெக்னாலஜி்ஸ் நிறுவனம் பெறாததையடுத்து, இன்று காலை பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்கியதிலிருந்து ஹெச்சிஎல் பங்குவிலை சரியத் தொடங்கியது. காலை வர்த்தகத் தொடக்கத்தில் ஹெச்சிஎல் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2.5 சதவீதம் சரி்ந்து, கடந்த 52 வாரங்களில் இல்லாத சரிவை எட்டியது.
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஊழியர்களின் செலவு அதிகரித்ததையடுத்து, கடந்த முதல்காலாண்டின் லாபம் நிறுவனத்துக்கு குறைந்தது. ஹெச்சிஎல் நிறுவனம் முதல் காலாண்டில் ரூ.331.00 கோடி லாபம் ஈட்ட இலக்கு வைத்திருந்தது, ஆனால், 328.30 கோடி மட்டுமே எட்டியது.
முதல்காலாண்டு முடிவுகளை அறிவித்தபின், சந்தையில் சரிவைச் சந்தித்துள்ள 2வது தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஹெச்சிஎல். இதற்கு முன் டிசிஎஸ் நிறுவனம் காலாண்டு முடிவுகளை அறிவித்த நிலையில் அந்த நிறுவனத்தின் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.