itr filing date: income tax: இதை மட்டும் மறந்திடாதிங்க! இல்லாட்டி வருமானவரித்துறை நோட்டீஸ் வரும்

Published : Jul 13, 2022, 12:48 PM IST
itr filing date: income tax: இதை மட்டும் மறந்திடாதிங்க! இல்லாட்டி வருமானவரித்துறை நோட்டீஸ் வரும்

சுருக்கம்

நாம் செய்யும் அதிக பணமதிப்பு கொண்ட பரிமாற்றங்களை வருமானவரித்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. வருமானவரி ரிட்டனில் இந்தப் பரிமாற்றத்தை குறிப்பிட மறந்தால், நிச்சயம் வருமானவரி நோட்டீஸை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.

நாம் செய்யும் அதிக பணமதிப்பு கொண்ட பரிமாற்றங்களை வருமானவரித்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. வருமானவரி ரிட்டனில் இந்தப் பரிமாற்றத்தை குறிப்பிட மறந்தால், நிச்சயம் வருமானவரி நோட்டீஸை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.

வங்கி டெபாசிட்கள், பரஸ்பர நிதித் திட்டங்கள், சொத்து விற்பது வாங்குவது தொடர்பான பரிமாற்றங்கள், பங்கு பரிவர்த்தனை ஆகியவற்றையும் வருமானவரித்துறை கண்காணிக்கிறது. குறிப்பிட்ட வரையறைக்கு மேல் பரிமாற்றத்தின் அளவு மீறிச் சென்றால், வருமானவரித்துறை நோட்டீஸை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் பங்கு விலை 52 வாரங்களில் இல்லாத அளவு சரிவு

தனிநபர்கள் செய்யும் உயர்மதிப்பு கொண்ட பரிமாற்றங்கள் குறித்த விவரங்களைப் பெறுவதற்காக அரசின் பல்வேறு துறைகளுடனும், நிதித்துறையின் பல பிரிவுகளுடனும் வருமானவரித்துறை ஒப்பந்தம் செய்துள்ளது.

என்னென்ன பரிவர்த்தனைகளுக்கு வருமானவரித்துறையின் நோட்டீஸை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்:

சேமிப்புக் கணக்கு மற்றும் நடப்புக்கணக்கு

சேமிப்புக் கணக்குகளில் ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சத்துக்கு மேல் பரிமாற்றங்கள் நடந்தால், வருமானவரித்துறை நோட்டீஸை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். நடப்பு கணக்குப் பற்றாக்குறையில் ரூ.50 லட்சத்துக்கு அதிகமாக பரிமாற்றம் நடந்து  அதை தெரிவிக்காமல் இருந்தால், வருமானவரி நோட்டீஸ் வரும்.

கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கும் கீழ் சரிந்தது: என்ன காரணம்? பெட்ரோல், டீசல் நிலை?

வங்கிகளில் வைப்பு நிதி

வங்கிகளில் வைப்பு நிதியாக ரூ.10 லட்சத்துக்கு மேல் செலுத்தும்போது வருமானவரித்துறை கண்காணிப்புக்குள் வருவோம். வைப்பு நிதியாக ஒருவர் டெபாசிட் செய்தபணம் ஒரே நேரத்தில் டெபாசிட் செய்யப்பட்டதா அல்லது பிரித்துப் பிரித்து டெபாசிட் செய்யப்பட்டதா என்பதை வங்கிகள் வருமானவரித்துறைக்கு தெரிவி்க்கும்.

கிரெடிட் கார்டு பில்

கிரெடிட் கார்டு பில் செலுத்தும்ப்போது, ரூ.ஒரு லட்சத்துக்கு அதிகமாகச் செலுத்தும்போது வருமானவரித்துறை கண்காணிப்பில் வருவோம். அனைத்துவிதமான உயர் பரிமாற்றங்கள் அனைத்தையும், கிரெடிட் கார்டு பரிமாற்றங்கள் அனைத்தையும் வருமானவரித்துறை கண்காணிக்கும். நிதியாண்டில் ரூ.10 லட்சம் வரை கிரெடிட் கார்டில் பில் செலுத்தினால் அதை வருமானவரி ரிட்டனில் தெரிவிக்க வேண்டும்.

தனிநபர் கடன் வாங்கப்போறீங்களா? 5 முக்கிய விஷயங்கள் தெரிந்திருத்தல் அவசியம்

அசையா சொத்துக்கள் விற்பனை மற்றும் வாங்குதல்

அசையா சொத்துக்கள் வாங்கினாலும்,விற்றாலும் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும், அதேபோல வருமானவரித்துறையிடம் அசையா சொத்துக்களில் ரூ.30 லட்சத்துக்கு அதிகமாக விற்பனை செய்தாலோ அல்லது வாங்கினாலோ அதை தெரிவிக்க வேண்டியது அவசியம்.

பங்கு, பரஸ்பர நிதி, பங்குப்பத்திரங்கள்

பரஸ்பர நிதித்திட்டங்கள், பங்குகள், பங்குபத்திரங்கள் ஆகியவை வாங்குவதை நிதியாண்டுக்குள் ரூ.10 லட்சத்துக்கு மேல் அதிகரிக்கக்கூடாது. 

வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்வது எப்படி? 12 எளிய வழிமுறைகள்

வெளிநாட்டு பணம் விற்பனை

வெளிநாட்டு கரன்ஸியை நிதியாண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் விற்பனை செய்தாலும், வருமானவரித்துறையினரிடம் தெரிவிக்க வேண்டும்.


 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

வீடு, கார், தனிநபர் கடன்களில் இஎம்ஐ குறையுது.. ரிசர்வ் வங்கியின் பரிசு.. எவ்வளவு குறையும்?
கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. ரெப்போ விகிதம் 5.25% ஆக குறைப்பு.. அதிரடி முடிவு