ஜூலை 1ம் தேதி முதல் வருமானவரி, கிரெடிட் கார்டு, டிடிஎஸ், பிளாஸ்டிக் தடை உள்ளிட்ட ஏராளமான மாற்றங்கள் நடைமுறைக்கு வர இருக்கின்றன.
ஜூலை 1ம் தேதி முதல் வருமானவரி, கிரெடிட் கார்டு, டிடிஎஸ், பிளாஸ்டிக் தடை உள்ளிட்ட ஏராளமான மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.
நடப்பு நிதியாண்டில் 2-வது காலாண்டான ஜூலை முதல் செப்டம்பர் நாளை தொடங்குகிறது. அது மட்டுமல்லாமல் புதிய மாற்றங்களும் நடைமுறைக்கு வரஉள்ளன. ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கும் மாற்றங்கள் குறித்துப் பார்க்கலாம்.
கிரெடிட் கார்டு விதிகள் மாற்றம்(credit card rules)
ரிசர்வ் வங்கியின் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு வழங்கல் மற்றும் செயல்பாடு குறித்த வழிகாட்டல்கள் 2022 , ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
வாடிக்கையாளர் ஒருவர் கிரெடிட் கார்டு தேவையில்லை என்று வங்கிக்கு விண்ணப்பித்தால் அந்த விண்ணப்பத்தை அடுத்த 7 நாட்களுக்குள் பரிசீலிக்க வேண்டும். இல்லாவிட்டால் தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் வாடிக்கையாளருக்கு ரூ.500 அபராதமாக கார்டு ரத்து செய்யும்வரை வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு விதிகள் நடைமுறைக்கு வருகின்றன
பான்-ஆதார் இணைப்பு(pan-aadhaar link)
பான் கார்டையும், ஆதார் கார்டையும் இணைப்பதற்கான காலக்கெடு ஏற்கெனவே முடிந்துவிட்டது. இருப்பினும் ரூ.500 செலுத்தி இணைப்பதறக்காலக்கெடுவும் ஜூன்30ம் தேதியுடன் முடிகிறது. ஜூலை 1ம் தேதி முதல் இரு மடங்கு அதாவது ரூ.1000 செலுத்தி கார்டை இணைக்க வேண்டும்.
கிரிப்டோகரன்ஸிக்கள் மீது TDS
டிஜிட்டல் சொத்துக்கள் அல்லது கிரிப்டோ சொத்துக்கள் பரிமாற்றத்தின் போது டிடிஎஸ் வசூலிக்கும் நடைமுறை ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுதொடர்பாக அறிவித்திருந்தார். மத்திய நேரடி வரிகள் வாரியமும் டிடிஎஸ் வசூலிப்பது குறித்து விரிவான விதிகளை வெளியிட்டுள்ளது. இதன்படி கிரிப்டோ பரிமாற்றத்தின் போது, ஒரு சதவீதம் டிடிஎஸ் வசூலிக்கப்படும்.
மருத்துவர்களுக்கான TDS
மருத்துவர்கள் பெரும் இலவசப் பொருட்கள், மருந்துகள், சமூகவலைத்தளத்தில் பிரபலமானவர்கள் பெறும் இலவசப் பொருட்கல் ஆகியவற்றுக்கு நிறுவனங்கள் வரி செலுத்தும் விதி ஜூலை1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. 2022 நிதிசட்டத்தில் 194ஆர் என்ற பிரிவு வருமானவரிச்சட்டம் 1961ல் சேர்க்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.20ஆயிரத்துக்கும் அதிகமான பரிசுப் பொருட்களை பெறுவோர் 10 சதவீதம் டிடிஎஸ் செலுத்த வேண்டும்.
டீமேட் கணக்கில் கேஒய்சி விவரத்தை தாக்கல் செய்ய ஜூன்30ம் தேதி கடைசித் தேதியாகும். இல்லாவிட்டால் ஜூலை 1ம் தேதி முதல் டீமேட் கணக்கு தானாகவே காலாவதியாகிவிடும். கேஒய்சி விவரத்தில் பெயர், முகவரி, பான் எண், செல்போன் எண், வருமான விவரம், மின்அஞ்சல் ஆகியவற்றை வழங்க வேண்டும்.
பிளாஸ்டிக் தடை(plastic ban)
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை 1ம் தேதி முதல் நாடுமுழுவதும் தடை விதிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கும், கடற்சார் பகுதிகளுக்கும் தீங்கு விளைவிக்கும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிப் பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் போன்றவைஜூலை 1ம்தேதி முதல் தண்டனைக்குரிய குற்றமாகும். இந்தத் தடையில் பலூன்களுக்கான பிளாஸ்டிக் குச்சி, ஸ்ட்ரா, பிளாஸ்டிக் ஸ்பூன், பிளாஸ்டிக் கப், ட்ரே, பிளாஸ்டிக் கத்தி, ரேப்பர், சிகிரெட் பாக்கெட், அழைப்பிதழ் உள்ளிட்டவைக்கு தடை வருகிறது.100 மைக்ரோனுக்கு குறைவான பிவிசி அல்லது பிளாஸ்டிக் கேரி பேக்குகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது
தொழிலாளருக்கான புதிய விதிகள்:
தொழிலாளர்களுக்கான புதிய சட்டங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இதன்படி,தொழிலாளர் ஊதியம், சமூகப் பாதுகாப்பு, தொழிலாளர் உறவு, பணியிடப் பாதுகாப்பு, சுகாதாரம், பணிச்சூழல் ஆகியவை குறித்து புதிய விதிகள் வந்துள்ளன. இதன்படி ஒரு ஊழியர் பணியிலிருந்து ராஜினாமா செய்தாலோ அல்லது நீக்கப்பட்டாலோ அவரின் கடைசி பணிநாளில் ஊதியம் அனைத்தையும் தந்துவிட வேண்டும் முன்பு 90 நாட்கள் வரை நிறுவனங்கள் அவகாசம் எடுத்துக்கொள்ளும். இதுபோன்ற பல்வேறு விதிகள் அமலுக்குவந்துள்ளன.