Jeep Compass Trailhawk: பிரீமியம் பட்ஜெட்டில் போல்டான ஆஃப்ரோடர் அறிமுகம் செய்த ஜீப்

By Kevin KaarkiFirst Published Feb 28, 2022, 11:09 AM IST
Highlights

ஜீப் காம்பஸ் டிரையல்ஹாக் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

ஜீப் காம்பஸ் டிரையல்ஹாக் மாடல் இந்திய சந்தையில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 2022 ஜீப் காம்பஸ் டிரையல்ஹாக் மாடல் துவக்க விலை ரூ. 30.72 லட்சம் என நிர்ணயம்  செய்யப்பரரரட்டு உள்ளது. இது முந்தைய டாப் எண்ட் மாடல் எஸ் வேரியண்டை விட ரூ. 1.38 லட்சம் அதிகம் ஆகும். மேம்பட்ட டிரையல்ஹாக் மாடலில் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் உள்ள சில அம்சங்கள் மற்றும் காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மேம்பட்ட டிரையல்ஹாக் மாடலில் புதிய ஹெட்லேம்ப்கள், கிரில் உள்ளிட்டவை காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பொனெட் டீக்கல், சிறிய 17 இன்ச் அலாய் வீல்கள், 225/65 R17 "all season" டையர்கள், உயர்த்தப்பட்ட ரைடு ஹைட், பின்புறம் சிவப்பு நிற ஹூக், ஃபெண்டர்களில் டிரெயில் ரேட் செய்யப்பட்ட பேட்ஜ் மற்றும் டிரெயில்ஹாக் லோகோ இடம்பெற்று இருக்கிறது. 

2022 டிரையில்ஹாக் மாடலில் 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் யூனிட், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர்,  எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. ஃபாக் லேம்ப்கள், ஆட்டோ-டிம்மிங் ரியர வியூ மிரர், ரெயின்-சென்சிங் வைப்பர்கள், 360 டிகிரி கேமரா, பானரோமிக் சன்ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் வெண்டிலேடெட் சீட்கள், பவர்டு சீட்கள் உள்ளன.

புதிய டிரையல்ஹாக் மாடலில் 2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 179 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 9 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் மற்றும் 4-வீல் டிரைவ் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

மேம்பட்ட டிரையல்ஹாக் மாடலை தொடர்ந்து மூன்று-ரோ மெரிடியன் எஸ்.யு.வி. மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடல் மே மாத வாக்கில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இதுதவிர கிராண்ட் செரோக்கி மாடலை இந்தியாவிலேயே அசெம்பில் செய்யவும் ஜீப் திட்டமிட்டு வருகிறது.

click me!