இஸ்ரேல் - ஹமாஸ் போர் எதிரொலி: பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 5 சதவீதம் அதிகரிப்பு

By SG Balan  |  First Published Oct 9, 2023, 10:19 AM IST

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் குழுவினர் இடையேயான போரின் எதிரொலியாக சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 5 சதவீதம் அதிகரித்துள்ளது. 


இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் குழுவினர் இடையேயான போரின் எதிரொலியாக சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 5 சதவீதம் அதிகரித்துள்ளது. 

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் உலக நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. மோதல் தொடங்கிய சில நாட்களிலேயே இரு தரப்பிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினர் 5000 க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையும் தீவிரத் தாக்குதல் நடத்தி வருகின்றது.

Latest Videos

undefined

இந்தப் போர் எதிரொலியாக சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 5% உயர்ந்திருக்கிறது. அக்டோபர் 6ஆம் தேதி 84.58 டாலராக இருந்த பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை இப்போது 89 டாலாராக உயர்ந்துள்ளது.

ஹமாஸ் - இஸ்ரேல் போர் மூண்டதால் மீண்டும் அப்படியே பலித்த நாஸ்டர்டாமஸ் கணிப்பு!

உலகின் கச்சா எண்ணெய் தேவையில் மூன்றில் ஒரு பங்கு மேற்கு ஆசியாவில் இருந்து கிடைந்து வருகிறது என்பதால், இஸ்ரேல் - ஹமாஸ் போர் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தாக்கம் செலுத்தும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் போர் மேற்கு டெக்சாஸில் காரணமாக கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 87 டாலராக உயர்ந்திருக்கிறது. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 4.18 டாலர் அல்லது 4.99 சதவீதம் அதிகரித்து ஒரு பீப்பாய்க்கு 88.76 டாலர் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. WTI கச்சா எண்ணெய் விலை 5.11 சதவீதம் அதிகரித்து பீப்பாய் ஒன்றின் விலை 87.02 டாலராக உள்ளது.

நீண்ட மற்றும் கடினமான போரை இஸ்ரேல் தொடங்குவதாகவும், இலக்குகளை அடையும் வரை இந்தப் போர் தொடரும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை கூறியிருக்கிறார்.

"ஹமாஸின் கொலைவெறித் தாக்குதலால் எங்கள் மீது போர் திணிக்கப்பட்டது. எங்கள் எல்லைக்குள் ஊடுருவிய பெரும்பாலான எதிரிப் படைகளை அழித்து முதல் கட்டம் முடிவுக்கு வந்துள்ளது. அதே நேரத்தில், இலக்குகளை அடையும் வரை ஓய்வு இல்லாமல் எங்கள் தாக்குதல் தொடரும். நாங்கள் இஸ்ரேல் குடிமக்களுக்கு பாதுகாப்பை மீட்டெடுப்போம். நாங்கள் வெற்றி பெறுவோம்" என்று நெதன்யாகு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை இன்று அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்

click me!