indonesia palm oil : இந்தோனேசியாவின் புதிய முடிவால் இந்திய வர்த்தகர்களுக்கு நிம்மதி

Published : Apr 26, 2022, 03:04 PM IST
indonesia palm oil : இந்தோனேசியாவின் புதிய முடிவால் இந்திய வர்த்தகர்களுக்கு நிம்மதி

சுருக்கம்

indonesia palm oil  :  இந்தோனேசியா பாமாயில் ஏற்றுமதிக்கு தடைவிதிப்பதாக கடந்த வாரம் தெரிவித்திருந்தநிலையி்ல் அது கச்சா பாமாயிலுக்குப் பொருந்தாது என்று தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இந்திய சமையல் எண்ணெய் சந்தைக்கு பெரிய நிம்மதியை அளித்துள்ளது.

இந்தோனேசியா பாமாயில் ஏற்றுமதிக்கு தடைவிதிப்பதாக கடந்த வாரம் தெரிவித்திருந்தநிலையி்ல் அது கச்சா பாமாயிலுக்குப் பொருந்தாது என்று தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இந்திய சமையல் எண்ணெய் சந்தைக்கு பெரிய நிம்மதியை அளித்துள்ளது.

நிம்மதி

ரஷ்யா உக்ரைன் போரால் ஏற்கெனவே சூரியகாந்தி எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தநிலையில் பாமாயில் ஏற்றுமதி தடையால் அதன் விலையும், அதனைச் சாரந்துள்ள பொருட்களின் விலையும் அதிகரிக்கும் சூழல் இருந்தது. ஆனால், இந்தோனேசிய அறிவிப்பால் பெரிய சலசலப்பு அடங்கியது.

இந்தோனேசிய அரசு கச்சா பாமாயில் ஏற்றுமதிக்கு தடைவிதிக்கவில்லை என்றும், இந்தோனேசியாவில் சுத்திகரிக்கப்பட்ட, ப்ளீச் செய்யப்பட்ட, புதிய மணம் சேர்க்கப்பட்ட பாமாயில் ஏற்றுமதிக்கு மட்டுமே தடை விதித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு சுத்திகரிப்பு நிலையங்கள்

இந்திய சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு கூட்டமைப்பின் இயக்குநர் பி.வி. மேத்தா கூறுகையில் “ 70 சதவீத பாமாயில் இறக்குமதியில் 8 முதல் 8.5 சதவீதம் கச்சா எண்ணெயாக வருகிறது. மற்றவை சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. இந்தோனேசியாவின் தடையால் இந்தியாவில் உள்ள உள்நாட்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் பயன்பெறும். இந்தோனேசிய அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம்” எனத் தெரிவித்தார்

கோத்ரேஜ் பாமாயில் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரி சவுகதா நியோகி கூறுகையில் “ இந்தோனேசியாவின் திடீர் அறிவிப்பால், மேமாதம் எதிர்பாத்திருந்த எந்த பிரச்சினையும் இருக்காது. அதிகமாக சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதியால் இந்தியாவில் உள்ள சுத்திகரிப்பு நிறவனங்கள் பாதிப்படும். இந்த அறிவிப்பால் உள்நாட்டு நிறுவனங்கள் பயன்பெறும் “ எனத் தெரிவித்தார்

இறக்குமதி

இந்தியா ஆண்டுக்கு 1.30 கோடி டன் முதல் 13.50 டன் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்கிறது. இதில் 63 சதவீதம் பாமாயில் இறக்குமதியாகும். 85 லட்சம் டன் பாமாயில் இறக்குமதியில் 45% இந்தோனேசியாவிலிருந்தும், மற்றவை சிங்கப்பூரிலிருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது.

கடந்த வாரம் இந்தோனேசிய அரசின் அறிவிப்பால் மே மாதத்திலிருந்து இந்தியாவுக்கு பாமாயில் இறக்குமதி இருக்காது. இதனால் பாமாயில் மட்டுமல்லாமல் சோப்பு, ஷாம்ப்பூ, நூடுல்ஸ், சாக்லேட் உள்ளிட்ட அன்றாடாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலையும் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இனிமேல் விலை உயர்வதற்கான வாயப்புகள் மிகக் குறைவு என்று நம்பலாம்.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

ஆதார் அட்டைக்கு புதிய பாதுகாப்பு: இனி நகல் தேவையில்லை!
நெட்வொர்க் இல்லையா.? நோ கவலை.. ஆப் இல்லாமல் இப்போ ஈசியா பணம் அனுப்பலாம்