elon musk tesla : சீனாவுல கார் தாயாரிச்சு இந்தியாவுல விற்க முடியாது: எலான் மஸ்கிற்கு நிதின் கட்கரி எச்சரிக்கை

By Pothy RajFirst Published Apr 26, 2022, 2:03 PM IST
Highlights

elon musk tesla : டெஸ்கா கார் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் இந்தியாவில் கார் தயாரித்தால்தான் இந்த நாட்டில் விற்க முடியும். சீனாவில் கார் தயாரித்து இந்தியாவில் விற்க முடியாது என்று மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

டெஸ்கா கார் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் இந்தியாவில் கார் தயாரித்தால்தான் இந்த நாட்டில் விற்க முடியும். சீனாவில் கார் தயாரித்து இந்தியாவில் விற்க முடியாது என்று மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தனியார் சேனல் ஒன்றுக்கு இன்று பேட்டியளி்த்தார் அப்போது அவர் கூறியதாவது:

Latest Videos

இந்தியாவின் எதிர்கால எரிபொருள் எல்என்ஜியாகத்தான் இருக்கும். அதற்கு ஏற்றார்போல்தான் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எந்திரங்களைத் தயாரித்து வருகிறார்கள்.

கடந்த சில வாரங்களாக பேட்டரி வாகனங்கள் விபத்து குறித்த செய்தி அதிகமாக வருகிறது. பேட்டரிகள் திடீரென தீப்பிடிக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. இதுபோன்ற தீ விபத்துகளை எதிர்காலத்தில் தடுக்க பேட்டரிகளுக்கான தரம் மற்றும் விதிகளை வகுக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கள் குறித்து ஆய்வு செய்யவும், தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை அறியவும் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மின்னணு வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் பேட்டரி வடிவமைப்பில் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். வாகனத்தில் ஏதாவது கோளாறு இருந்தால், அதை திரும்பப்பெற்று சரி செய்ய வேண்டும். பேட்டரி செல்களில் ஏதோ சில பிரச்சினைகள் உள்ளன.
இந்தியாவில் எலான் மஸ்க் தன்னுடைய டெஸ்லா கார்களை விற்பனை செய்வதை வரவேற்கிறோம்.

ஆனால், எலான் மஸ்க் தன்னுடைய டெஸ்லா கார்களை இந்தியாவில் தயாரிக்க வேண்டும். இந்தியாவில் தயாரித்தால் மட்டுமே டெஸ்லா கார்களை இந்தியாவில் விற்க முடியும்.  சீனாவில் தயாரிக்கப்பட்ட காரை இந்தியாவில் விற்பனை செய்ய முடியாது.

எலான் மஸ்கிற்கின் எண்ணம் என்பது சீனாவில் டெல்லா கார்களை தயாரிக்க வேண்டும் அதை இந்தியாவில் விற்க வேண்டும். நாங்கள் எலான் மஸ்கிற்கிடம் கேட்டுக்கொள்வது என்னவென்றால், இ்ந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலையைத் தொடங்குங்கள், உங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் இங்கு உள்ளன. தரமான உற்பத்தியைத் தொடங்கலாம், விற்பனையும் செய்யலாம். இந்தியாவில் டெஸ்லா கார் தொழிற்சாலையைத் தொடங்கினால் உங்களை வரவேற்கிறோம், ஆனால், சீனாவில் கார்களைத் தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்வது ஜீரணிக்க முடியாத விஷயம்

இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்தார்

எலான் மஸ்க் இந்தியாவில் கார் தொழிற்சாலை தொடங்குவதற்கு ஆதரவு தெரிவித்து, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கனா, தமிழகம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் தொழிற்சாலையைத் தொடங்க அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது

click me!